700 எச்பி பென்ஸ் எஸயூவியை ட்யூனிங் செய்து வாங்கிய துபாய் போலீஸ்!
துபாய் போலீசாரிடம் இருக்கும் சூப்பர் கார்கள் மற்றும் விலையுயர்ந்த கார்களின் பட்டியலை ஏற்கனவே வழங்கியிருக்கிறோம். அதிசக்திவாய்ந்த அந்த கார்களின் வரிசையில் தற்போது 4 புதிய கார்களை துபாய் போலீசார் இணைக்க உள்ளனர்.
துபாயில் நடந்து வரும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த 4 கார்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில், 700 எச்பி ஆற்றல் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டதுடன், பிரத்யேக வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பென்ஸ் ஜி63 எஸ்யூவியும் அடங்கும். கண்காணிப்பு பணிகளுக்காக துபாய் போலீசார் பயன்படுத்த இருக்கும் அந்த எஸ்யூவியின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் காண ஸ்லைடருக்கு வாருங்கள்.

கஸ்டமைஸ் கம்பெனி
பிராபஸ் என்ற பிரபலமான கார் கஸ்டமைஸ் நிறுவனம் பென்ஸ் ஜி63 எஸ்யூவியை துபாய் போலீசுக்கு கஸ்டமைஸ் ட்யூனிங் செய்து கொடுத்துள்ளது.

போலீஸ் கார்
துபாய் போலீஸ் வாகனங்களுக்கு உரித்தான பச்சை வெள்ளை கலவை கொண்டதாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

பெயர்
இந்த எஸ்யூவிக்கு பிராபஸ் பி63எஸ் வைட் ஸ்டார் போலீஸ் எடிசன் என்று இந்த எஸ்யூவிக்கு பார்பஸ் பெயரிட்டுள்ளது.

எஞ்சின்
இந்த அதிசக்திவாய்ந்த எஸ்யூவியில் 700 எச்பி ஆற்றல் கொண்ட 5.5 லிட்டர் வி8 பை-டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்
ரோந்து பணிகளில் பயன்படுத்தப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி 0-100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும்.

சக்கரங்கள்
இந்த எஸ்யூவியில் மோனோபிளாக் போர்ஜ்டு வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கையாளுமை
சிறப்பான கையாளுமையை கொடுக்கும் வகையில் விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

டார்க்
இந்த எஸ்யூவி அதிகபட்சமாக 960 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் போலீஸ் கார்
துபாய் போலீசில் இணையும் புதிய கஸ்டமைஸ் பென்ஸ் எஸ்யூவி படங்கள்.

துபாய் போலீஸ் கார்
துபாய் போலீசில் இணையும் புதிய கஸ்டமைஸ் பென்ஸ் எஸ்யூவி படங்கள்.

துபாய் போலீஸ் கார்
துபாய் போலீசில் இணையும் புதிய கஸ்டமைஸ் பென்ஸ் எஸ்யூவி படங்கள்.

துபாய் போலீஸ் கார்
துபாய் போலீசில் இணையும் புதிய கஸ்டமைஸ் பென்ஸ் எஸ்யூவி படங்கள்.

துபாய் போலீஸ் கார்
துபாய் போலீசில் இணையும் புதிய கஸ்டமைஸ் பென்ஸ் எஸ்யூவி படங்கள்.

துபாய் போலீஸ் கார்
துபாய் போலீசில் இணையும் புதிய கஸ்டமைஸ் பென்ஸ் எஸ்யூவி படங்கள்.


Click it and Unblock the Notifications








