மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரில் வந்திறங்கிய அரசியல்வாதி.. இணையத்தை மிரட்டும் வீடியோ!
நம்மில் சிலர் நம்ம ஊரு அரசியல்வாதிங்கதான் மிகப் பெரிய பணக்காரர்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிட மிகப் பெரிய பணக்காரர்களாக வெளிமாநில அரசியல்வாதிகள் சிலர் இருக்கின்றனர். அந்தவகையில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படுவர் என் தர் ஆவார்.
அரசியலிலும், தொழில்துறையிலும் தனக்கென மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை என் தர், உருவாக்கி வைத்திருக்கின்றார். இவரே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் ஓர் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றையே வாங்கி இருக்கின்றார்.

மேலும், அந்த காரை வாங்க இந்தியாவின் மற்றுமொரு அதிக விலைக் கொண்ட கார் மாடலிலேயே வந்திறங்கியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறி இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்680 லக்சூரி செடான் ரக காரையே என் தர் வாங்கிச் சென்றிருக்கின்றார்.
இந்த காரை டெலிவரி எடுக்க அவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட்ஸ் (Range Rover Sport) காரில் வந்திருக்கின்றார். இரண்டும் இந்தியாவின் மிக உயரிய விலைக் கொண்ட சொகுசு கார் மாடல்கள் ஆகும். லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் சொகுசு கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 1.69 கோடி ஆகும்.

ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த காரைக் கொண்டே ரூ. 3.43 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்680 காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். இதனால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வாயடைத்துப் போயிருக்கின்றது.
இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் ரூ. 4 கோடியை நெறுங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 4 கோடிக்கு விற்கும் அளவிற்கு அப்படி என்ன சிறப்புகளை அந்த சொகுசு கார் தாங்கி இருக்கின்றது என்கிற கேள்வியும், சந்தேகமும் உங்களுக்கு எழும்பியிருக்கக் கூடும்.

மிக மிக அதிக இட வசதியைத் தாங்கியதே மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்680 ஆகும். இதில் பயணிக்கும் போது சாலையில் செல்லும் அனுபவத்திற்கு பதிலாக கப்பலில் மிதக்கும் அனுபவமே கிடைக்கும். அந்த அளவிற்கு சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் வகையிலேயே இந்த காரை பென்ஸ் வடிவமைத்திருக்கின்றது.
இந்த அடிப்படையிலேயே மிக நீளமான வீல்பேஸ் (wheelbase) கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 5.5 மீட்டர் நீளம் கொண்டதே இந்த சொகுசு கார். இந்த அளவால்தான் இந்தியாவின் மிக நீளமான கார் என்கிற பெருமையை மேபேக் எஸ்680 சூடியிருக்கின்றது. இந்த சிறப்பின் காரணமாகவே அம்பானி போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே என் தர் போன்ற பணக்கார அரசியல்வாதிகளின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது. தானாக கதவுகள் திறத்தல் மற்றும் மூடுதல், பட்டனை தட்டினால் அட்ஜஸ்ட் ஆகும் இருக்கைகள், பொழுதுபோக்கிற்கான திரைகள், மசாஜ் செய்யும் - சில் மற்றும் சூடாக்கும் வசதிக் கொண்ட இருக்கை என ஏகப்பட்ட சொகுசு வசதிகளை இந்த காரில் அள்ளி அள்ளி வழங்கி இருக்கின்றது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.
இந்த அம்சங்களினாலும் பெரும் பணக்காரர்கள் இந்த காரை மிக அதிகளவில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த சொகுசு காரில் 6.0 லிட்டர் டர்போசார்ஜட் வி12 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 610 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் நான்கு வீல் இயக்கம் கொண்ட கார் மாடலும் ஆகும். இதுமாதிரியான இன்னும் பல பிரம்மிக்க வைக்கும் வசதிகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே மெர்சிடிஸ் மேபேக் எஸ்680-இன் விலை மூன்றரை கோடி ரூபாக்கும் அதிகமாக இருக்கின்றது.
இத்தகைய விலை உயர்ந்த காரையேச மெகாலயா மாநிலத்தின் பணக்கார எம்எல்ஏ ஆன என் தர் தற்போது வாங்கி இருக்கின்றார். இவரிடத்தில் ஏற்கனவே லம்போர்கினி ஹூராகேன் போன்ற அரிய வகை கார் மாடல்களும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்680 மாடலையும் அவர் இணைத்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்680 காரை குறிப்பிட்ட சில புள்ளிகளே பயன்படுத்து வருகின்றனர். அவர்களின் வரிசையிலேயே தற்போது என் தர் இணைந்திருக்கின்றார். இந்த காரை சாலையில் பார்ப்பதே மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு நான்கு கோடி ரூபாய் என்கிற அதன் உச்சபட்ச விலையே காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









