ரெஜிஸ்டர் கூட செய்யல எலும்பு கூடா நிக்குது! விபத்தை விட மோசமானது இந்த செயல்னு சொன்னா எங்கே கேக்குறாங்க..
விபத்துகளுக்கு வழிவகுக்கக் கூடிய மிக முக்கியமான செயல்களில் வாகன ஸ்டண்டும் ஒன்றாக இருக்கின்றது. இந்தியாவில் அரங்கேறும் பல்வேறு விபத்துகளுக்கு பின்னால் இதுவே மறைந்திருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா. நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதுதான் உண்மை. வாகன ஓட்டிகள் சிலர் சில நிமிட குதூகலத்திற்காக செய்யக் கூடிய செயல் பல மோசமான விபத்துகளுக்கு வழி வகுத்திருக்கின்றன. இதனால்தான் வாகனங்கள் சார்ந்து அரங்கேற்றப்படும் ஸ்டண்ட் செயல்களுக்கு மிக கடுமையான நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே வாகன ஸ்டண்ட் எவ்வளவு மோசமானது என்பதைக் காண்பிக்கக் கூடிய ஓர் சம்பவம் இந்தியாவில் தற்போது அரங்கேறி இருக்கின்றது. வாகன ஸ்டண்ட்டில் ஈடுபட்ட புத்தம் புதிய கார் மாடல் ஒன்று தீயிற்கு முழுமையாக இரையாகி வெறும் எலும்புக் கூடாக மாறி இருக்கின்றது.

மஹிந்திரா தார் (Mahindra Thar), இதுவே தீயிற்கு இரையாகி நிற்கும் கார் மாடல் ஆகும். கேரளாவின் காசர்கோடு பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தனியார் மைதானம் ஒன்றில் கார் ஸ்டண்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபரீத நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.
குறிப்பாக, இந்த கார் மிகவும் புதியது என கூறப்படுகின்றது. இன்னும் பதிவுகூட செய்யப்படாத அளவிற்கே புத்தம் புதிய வாகனம் அது ஆகும். மேலும், புத்தம் புதிய தார் காரின் இந்த நிலைமைக்கு ரீல்ஸ் மோகமும் மற்றுமொரு காரணம் என கூறப்படுகின்றது. ரீல்ஸ் செய்யும் நோக்கில் ஸ்டண்ட்டில் ஈடுபட்டபோதே இந்த தீ விபத்து அரங்கேறி இருக்கின்றது.
காரை வளைத்து வளைத்து ஓட்டியிருக்கின்றனர். குறிப்பாக, டயரை தரையுடன் தேய்த்து புகை வரும் அளவிற்கு விரட்டச் செய்திருக்கின்றனர். இந்த நிலைியலேயே திடீரென காரில் தீ பற்றத் தொடங்கி இருக்கின்றது. ஆரம்பதத்தில் மிகவும் மெதுவாக பரவ தொடங்கிய தீ, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுக்க பரவியிருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. குறிப்பாக, தனியார் மைதானம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அங்கு பெரிய அளவில் இல்லை. இதன் விளைவாக மற்றவர்களுக்கு ஆபத்தில்லாமல் இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அதேவேளையில், தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள்ளாக கார் முழுக்க தீ பற்றி எரிந்து, அந்த வாகனத்தை அடையாளம் தெரியாத அளவிற்கு வெறும் கூடாக மாற்றியிருக்கின்றது.

ஸ்டண்ட் செய்தால் விபத்து ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால், இங்கு தீ விபத்து அரங்கேறியிருக்கின்றது. இது முற்றிலும் புதிது ஆகும். எதனால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் என்பதைகூட இங்கு துள்ளியமாக அனுமானிக்க முடியவில்லை. அதேவேளையில், காரை வேகமாக சுழற்றியதனால், காரின் டயரில் ஏற்பட்ட அதீத வெப்பமே இந்த விபத்திற்கு வழிவகுத்திற்கும் என நம்பப்படுகின்றது.
டயர்கள் தீ பற்றும் திறன் கொண்டவை ஆகும். ஆனால், இதை பலரும் உணராமல் டயரை சாலையில் உராய வைத்து புகையைக் கிளப்பி மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இதுமாதிரியான செயலையே புதிய தார் காரின் உரிமையாளரும் ஈடுபட்டிருக்கின்றார். இந்த நிலையே அக்காரை தீ பிடிக்கச் செய்திருக்கின்றது.
ஓர் டயர் 400 டிகிரி வரையில் மட்டுமே வெப்பத்தைத் தாங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதற்கும் மேல் செல்லும் போது அது எளிதில் தீ பற்ற நேரிடும். மற்றபடி, இது அவ்வளவு எளிதில் தீ பிடிக்காது. அதேவேளையில், தீ பிடித்துவிட்டால் அது மளமளவென தீயிற்கு இரையாகத் தொடங்கிவிடும்.
இதன் விளைவாகவே புதிய தார் தற்போது முழுக்க தீயிற்கு இரையாகி எலும்பு கூடாக மாறியிருக்கின்றது. தற்போது இந்த காருக்கு இன்சூரன்ஸை கூட கிளைம் செய்ய முடியாது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. வாகனத்தின் பதிவுகூட இன்னும் நடைபெறாத காரணத்தினால் அதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தார் உரிமையாளருக்கு இது மிகப் பெரிய தண்ட செலவாகும். வாகனத்தையும் மீட்டெடுக்க முடியாது, இழப்பிற்கான இழப்பீட்டையும் பெற முடியாது. இதுமாதிரியான காரணங்களினாலேயே வாகன ஸ்டண்ட் கூடவே கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், சிலர் விதிகளை மீறி இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









