நீதாம்மா டிரைவரு, உன்னைய வெச்சி தான் ஓட்டனும்... ஷோரூமில் ஒரே அசிங்கமா போய்டுச்சி!!
கார் விபத்துகள் (Car Accident) நம் இந்தியாவில் தினந்தோறும் நடக்கக்கூடிய ஒன்றாகும். செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு கார் விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதில் ஒரு சில விபத்துகள் மிக மோசமானதாக இருக்கின்றன. ஒரு சில விபத்துகள் நகைச்சுவையாக அமைகின்றன. அந்த வகையில், இங்கு ஒருவர் புத்தம் புதிய மாருதி காரை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்ற சில நிமிடங்களில் அதனை விபத்திற்கு உள்ளாக்கி உள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பல லட்ச ரூபாய்கள் கொடுத்து வாங்கிய காரை ஷோரூமில் இருந்து வெளியே கொண்டுவந்த உடனேயே விபத்தில் சிக்குவது யவரொருவருக்கும் மோசமான விஷயம் ஆகும். ஆனால், அவ்வாறான சம்பவங்களை சிலமுறை பார்த்துள்ளோம். ஒரு சிலர், காரை டெலிவிரி பெற்ற சில நிமிடங்களில் ஷோரூம் வளாகத்திற்குள் விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக, மேனுவல் காரை ஓட்டி பழகியவர்கள் முதல்முறையாக ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது விபத்து ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் புத்தம் புதியதாக மாருதி சுஸுகி செலேரியோ (Maruti Suzuki Celerio) காரை வாங்கிய பெண் ஒருவர் சில நிமிடங்களில் அந்த காரை சாலைக்கு அருகே இருந்த பள்ளத்தில் கொண்டுப்போய் சொருகியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், கார்வர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஷோரூமில் இருந்து அந்த பெண் காரை டெலிவிரி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷோரூமுக்கு வெளியே காருக்கு அருகில் நிற்கும் அந்த பெண், வீடியோவில் அடுத்த காட்சியில் காரினுள் டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் ஷோரூமை சேர்ந்த பணியாளர் ஒருவர் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது.

இந்த பெண்ணின் உறவினர்கள் அனைவரும் காருக்கு வெளியே இருந்து அவரை உற்சாகப்படுத்துவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில், காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஆக்ஸ்லரேட்டரை அழுத்திய இந்த பெண் அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை, கார் வேகமாக ஷோரூம் வளாகத்தை விட்டு சாலையை நோக்கி பாய்ந்தது.
இதனை கண்ட சுற்றியிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு காருக்கு பின்னால் ஓடுவதை வீடியோவில் காண முடிகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஷோரூம் வளாகத்தின் கேட்டை உடைத்துக் கொண்டு சென்ற கார், சாலையை கடந்து அங்கிருந்த பள்ளத்தில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் புத்தம் புதிய செலேரியோ காரின் முகப்பு பகுதி சேதமடைந்துள்ளது. குறிப்பாக, காரின் இடதுப்பக்க ஹெட்லைட் பெரிய சேதத்தை சந்தித்துள்ளது.

காரின் முன்பக்க பொனெட், கிரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. மற்றப்படி, காரினுள் இருந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை. இந்த விபத்துக்கு இரு காரணங்களுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். முதல் காரணம் என்னவென்றால், இது ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட செலேரியோ கார் ஆகும். மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட காரை ஓட்டி பழகியவர்களுக்கு முதல்முறையாக ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது சிறிய தடுமாற்றம் இருக்கும் என ஏற்கனவே கூறினோம் அல்லவா.
இந்த தடுமாற்றத்தில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸலரேட்டர் பெடலை இவர் அழுத்தி இருக்கலாம். இன்னோரு காரணம் என்னவென்றால், புதிய கார் வாங்கிய அதீத மகிழ்ச்சியில் தவறுதலாக பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸலரேட்டரை இந்த பெண் அழுத்தியிருக்கலாம். ஆனால், இதில் எது காரணம் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், விபத்தை ஏற்படுத்திய பெண், அதன்பின் எந்தவொரு விபரத்தையும் வெளியிடவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறிய 2 காரணங்கள் இல்லாமல், 3வது ஒரு காரணமும் உள்ளது. அதுதான், போதிய கார் டிரைவிங் அனுபவம் இல்லாதது ஆகும். கார் ஓட்ட முழுமையாக தெரியவில்லை என்றாலும், சொந்தக்காரர்கள் முன் கெத்து காட்டுவதற்காக, ஒரு சிலர் தெரியாத விஷயத்தை தெரிந்தது போன்று காட்டிக் கொள்வார்கள். ஒரு சில விஷயங்களில், தெரியாததை ஓப்பனாக ஒத்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications









