ஆசை ஆசையா வாங்கன புது காருக்கு 63 லட்ச ரூபா ரிப்பேர் செலவு! டெலிவரி எடுத்த கொஞ்ச நாளிலேயே இப்படியா!
இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே உருவத்தில் மிகவும் பெரியது. இந்த காரின் நீளம் மட்டும் 5.2 மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் அகலம் 1.96 மீட்டர்களாக உள்ளது. எனவே இந்த காரை இயக்கும்போது மிகவும் கவனமாக இயக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் என நாங்கள் சொல்வதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. அது விலை ஆகும்.
இந்த காரின் ஆரம்ப விலையே 1.34 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.39 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். எனவே இந்த கார் விபத்தில் சிக்கினால், ரிப்பேர் செய்ய பெரும் தொகையை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

அப்படியான ஒரு சூழல் ஒருவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஆம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் ஒன்று தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் என்ன? என்பது சரியாக தெரியவில்லை.
வயல்வெளியில் இந்த கார் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இந்த விபத்து காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் பானெட், டிரைவர் சைடு ஹெட்லேம்ப், ஃபென்டர், ஓஆர்விஎம்கள், பின் பக்க விண்டுஷீல்டு மற்றும் டெயில்லைட்கள் உள்ளிட்டவை எல்லாம் சேதம் அடைந்துள்ளன.

எனவே இந்த காரை சரி செய்வதற்கு சுமார் 63 லட்ச ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது காரின் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிட்டத்தட்ட பாதியை ரிப்பேர் செய்வதற்காக செலவு செய்துள்ளனர். ஆனால் இன்சூரன்ஸ் மூலமாக இந்த பணம் பெறப்பட்டதா? அல்லது உரிமையாளரின் சொந்த பணமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
எனினும் 63 லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தொகைதான். எனவே விலை உயர்ந்த கார்களை இயக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தல், இந்த காரின் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால்தான், இந்த விபத்து நிகழ்ந்தாக தெரிகிறது.
ஆனால் அவர் அதிவேகமாக சென்றாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். சாலை விபத்தில் சிக்கிய இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் புத்தம் புதியது ஆகும். வாங்கிய சிறிய காலத்திலேயே அதிகம் செலவு வைக்க கூடிய சாலை விபத்தில் சிக்கியிருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், முழு கவனமும் சாலையில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். குறிப்பாக அதிவேகமாக பயணம் செய்வது போன்ற விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற பிரச்னைகளில் சிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








