பிராண்ட்-நியூ பைக்குகள் என்று இதைதான் வாங்கிட்டு போறோம்! வீடியோ மட்டும் வெளிவரலனா பலருக்கு விஷயம் தெரியாது!!
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 1 வார இடைவெளிக்கு பின் துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) போட்டியின் பெங்களூருவில் நடக்கவிருந்த முதல் ஆட்டம் மழையால் ரத்தானதை பார்த்திருப்பீர்கள். பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே கடந்த மே 17ஆம் தேதி நடைபெற இருந்த அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதில் இருந்து எந்த அளவிற்கு பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது என்பதை அறியலாம்.
பெங்களூருவின் தாழ்வான பகுதிகள் அனைத்தையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாத காலி மைதானங்களில் கால் முட்டிக்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வாறு, காலியான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஷோரூமுக்கு சொந்தமான பிராண்ட்-நியூ ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் மழைநீரில் மூழ்கி உள்ளன.

பைக் பிரியர்கள் எவரொருவரையும் கவலையுற செய்யும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ராயல் என்ஃபீல்டின் காண்டினெண்டல் ஜிடி650 (Continental GT650), கிளாசிக் 350 (Classic 350), இண்டர்செப்டர் 650 (Interceptor 650), ஹிமாலயன் 450 (Himalayan 450) மற்றும் ஹண்டர் 350 (Hunter 350) உள்ளிட்ட பைக்குகள் மழைநீரில் சேதமாகி நிற்பதை காண முடிகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இது பெங்களூருவின் கிருஷ்ணாநகர் பகுதியில் ஓசூர் மெயின் ரோடில் உள்ள ராயல் என்ஃபீல்டின் அங்கீகாரம் பெற்ற கோரமங்களா மோட்டார்ஸ் (Koramangala Motors) டீலர்ஷிப் ஷோரூம் ஆகும். வீடியோவில் காட்சி தருபவைகளில் பிராண்ட்-நியூ ராயல் என்ஃபீல்டு பைக்குகளுடன் சேர்த்து கஸ்டமர்களின் ராயல் என்ஃபீல்டு பைக்குகளும் அடங்குகின்றன.

பைக்குகள் முழுவதையும் மழைநீர் மூழ்கடிக்கவில்லை என்றாலும், பைக்குகளின் சக்கரங்களை முழுவதுமாக மூழ்கடித்துள்ளது. பைக்குகளில் எளிதில் துருப்பிடிக்க கூடிய பாகங்களுள் சக்கரங்களும், அவற்றின் ரிம்களும் ஒன்றாகும். அதேபோல், பைக்கின் என்ஜின் சிஸ்டத்திற்கு உள்ளேயும் நீர் புகுந்திருக்கும். அந்த நீரை முழுவதுமாக வெளியேற்றிய பின்னரே பைக்குகளை சம்பந்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப் ஷோரூம் விற்பனை செய்யும்.
என்றாலும், இந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளை எந்த அளவிற்கு பிராண்ட்-நியூ பைக்குகளாக கருத்தில் கொள்ள முடியும் என்பது பெரிய கேள்வி குறியாகும். இவ்வாறு உங்களது ஏரியாவில் கனமழை பெய்து, அவற்றால் வாகனங்கள் நீரில் மூழ்கியதாக கேள்விப்பட்டால், வாகனத்தை வாங்குவதற்கு முன்னர் டெலிவிரிக்கு முந்தைய ஆய்வுகளை செய்து பார்க்க வேண்டும்.
பைக்குகள் குறித்த விரிவான புரிதல் இருந்தால் இந்த ஆய்வுகளை நீங்களே செய்து பார்க்கலாம் அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்காகவே தங்களது சேவைகளை வழங்குகின்றன. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றிடம் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி அதன் உதவியுடன் ஆய்வுகளை செய்து பார்க்கலாம்.
எப்போதுமே வாகனத்தை வாங்கும்முன் அந்த வாகனம் எப்போது உருவாக்கப்பட்டது? எப்போது தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டது? என்பதை அறிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், டீலர்ஷிப் ஷோரூம்களில் நீண்ட நாட்களுக்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால், இவ்வாறு மழைநீர் போன்றவற்றால் சேதமடைந்திருக்க கூடும். முடிந்த அளவிற்கு இவ்வாறு பைக்குகளை வெளியில் நிறுத்தி வைக்கும் ஷோரூம்களில் இருந்து பைக்குகளை வாங்க வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் இந்த அளவிற்கு மழைநீர் தேங்கியிருப்பதே முதலில் ஆச்சிரியமாக உள்ளது. ஏனெனில், அங்கு மழைநீர் வடிகால் அமைப்பு பல பகுதிகளில் சிறப்பாக உள்ளது. அதேபோல், பிராண்ட்-நியூ பைக்குகளை இவ்வாறு ஷோரூமுக்கு வெளியே நிறுத்தி வைத்து இருப்பதும் ஆச்சிரியத்தையும், ஷோரூம் மீது சற்று சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில், பெரும்பாலும் கார்கள் தான் ஷோரூம் கட்டிடத்திற்குள் இடம் இல்லாததால் வெளியே நிறுத்தப்படுவது வழக்கம்.


Click it and Unblock the Notifications








