பார்க்கிங் ஏரியாவில் டெலிவிரி பெறும் அளவுக்கு அவருக்கு இது எல்லாம் சாதாரணமான கார்! ஒண்ணு வாங்கி போட்டாச்சு!

சினிமா (Cinema) நட்சத்திரங்கள் என்றாலே அவ்வப்போது புதுசு, புதுசாக விலையுயர்ந்த கார்களை வாங்கக்கூடியவர்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். குறிப்பாக, மலையாள சினிமா பிரபலங்கள் கார்கள் மீதும், விலையுயர்ந்த பைக்குகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். மார்க்கெட்டில் புதியதாக எதாவது விலையுயர்ந்த கார் அல்லது பைக் அறிமுகமாகினால் முதலாவதாக வாங்குவது யாராக இருக்கும் என்று பார்த்தால், மலையாள சினிமா பிரபலங்களாகவே இருக்கும். அதிலிலும் குறிப்பாக, உலகளவில் பிரபலமான கார் அல்லது பைக் இந்தியாவிற்கு வந்தாலே அவை கேரளாவில்தான் அதிகமாக விற்பனையாகுகின்றன.

அந்த வகையில், உலகின் பல நாடுகளில் பிரபலமாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் (Volkswagen Golf) கார் இந்தியாவில் 'கோல்ஃப் ஜிடிஐ' (Golf GTI) என்கிற வெர்சனில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த காரை பல மலையாள சினிமா நடிகர்கள் வாங்கியுள்ளதாக ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

brand-new volkswagen golf gti car

இந்தியாவில் மொத்தமாகவே வெறும் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அவற்றுள் 25 கோல்ஃப் ஜிடிஐ கார்கள் கேரளாவில் ஒரே நாளில் ஒரே ஷோரூம் மூலமாக கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டன. இந்த 25 கோல்ஃப் ஜிடிஐ கார்களில் பெரும்பாலானவற்றை மலையாள சினிமா நடிகர்கள் வாங்கியுள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

அந்த வரிசையில் தற்போது மற்றொரு பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற்றுள்ளார். மலையாள நடிகர் என சொல்வதை காட்டிலும், பிரபலமான தென்னிந்திய நடிகர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக ஃபகத் ஃபாசில் விளங்குகிறார்.

brand-new volkswagen golf gti car

இன்னும் சொல்லப்போனால், நடிகர் அல்லு அர்ஜூனின் பேன் இந்தியா திரைப்படமான 'புஷ்பா'-இல் நடித்ததன் மூலமாக இந்திய அளவில் ஃபகத் ஃபாசில் கவனத்தை பெற்றார். இத்தகையவரிடம் ஏற்கனவே பல விலையுயர்ந்த கார் & பைக்குகள் இருக்கும் நிலையில், தற்போது முற்றிலும் கருப்பு நிறத்திலான ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கியுள்ளார்.

இதனை 'கிரேனாடில்லா பிளாக் மெட்டாலிக்' (Grenadilla Black Metallic) என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அழைக்கிறது. இந்த கருப்பு நிறத்தில்தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் புதிய கோல்ஃப் ஜிடிஐ காரை அதிகமாக விளம்பரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பிராண்ட்-நியூ கோல்ஃப் ஜிடிஐ கார் நடிகர் ஃபகத் ஃபாசிலின் இருப்பிடத்திற்கே சென்று டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

இதனை, சம்பந்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படத்துடன் தெரிவித்துள்ளது. கேரளாவின் காயம்குலத்தில் செயல்படும் இதே ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூம் தான் சமீபத்தில் ஒரே நாளில் 25 கோல்ஃப் ஜிடிஐ கார்களை பெரிய 5-ஸ்டார் ஓட்டல் ஒன்றின் வளாகத்தில் வைத்து கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்து இருந்தது.

இந்த ஷோரூம் சார்பில் நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு கோல்ஃப் ஜிடிஐ கார் டெலிவிரி செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படத்தில், கட்டிடம் ஒன்றின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டு இருக்கும் ஃபகத் ஃபாசிலின் புதிய கோல்ஃப் ஜிடிஐ காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் இரண்டையும் இணைக்கக்கூடிய வகையில் ஒளிரக்கூடியதாக வழங்கப்பட்டிருக்கும் எல்இடி லைட் பாரை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்கள் உண்மையில் எதிர்பார்த்ததை காட்டிலும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. ரூ.52.99 லட்சத்தில் ஆரம்ப விலையை கொண்ட காரை குறிப்பாக கேரளாவில் அதிக பேர் வாங்குகின்றனர் என்றால், இந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஏற்கனவே அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 21, 2025, 19:27 [IST]
English summary
Brand new volkswagen golf gti car owned by actor fahadh faasil check price all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+