கல்யாணத்துக்கு புதுமண பெண் இப்படி வருவாங்கனு யாரும் எதிர்பார்க்கல!! வைரல் வீடியோ!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் மணப்பெண் ஒருவர் கெத்தாக ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திருமண மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதனை பற்றியும், இந்த மணப்பெண் ஓட்டிவந்த ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் இனி பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை பின்னுக்கு தள்ளி, எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் என தொடர்ந்து கூறி வருகிறோம். இது உண்மை என்பதுபோல் அவ்வப்போது சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில்தான் இங்கு ஒரு புது திருமண பெண் தனது திருமணத்துக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்துள்ளார்.

bride arrived on electric scooter

இந்த கால இளம் தலைமுறையினர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருப்பது மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களில் மாடர்ன் வசதிகள் அதிகமாக கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பியில் திருமண மண்டபத்திற்கு குதிரையில் வருவதற்கு பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் பெங்களூரில் மணமகன் ஒருவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கல்யாண மண்டபத்திற்கு வந்தது இணையத்தில் வைரலாகியது. தற்போது, அதே கர்நாடகாவில் இந்த மணப்பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். மண்டபத்திற்கு இந்த மணப்பெண் ஓட்டி வந்தது ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

ஆம்பியரின் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் காஷ்மீரில் இருந்து கன்னியாக்குமரி வரையில் சென்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் எந்தவொரு கால வெப்பநிலையிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்கக்கூடியது என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த பயணத்தை மேற்கொண்டு இருந்தனர். இந்த சாதனையை ஆம்பியர் நெக்ஸஸ் ஸ்கூட்டரில் செய்து காட்டியது உடுப்பியை சேர்ந்த ஒரு காதல் ஜோடி ஆகும்.

இந்த நெடுந்தூர பயணத்தை முடித்த நிலையில், இந்த காதல் ஜோடி தற்போது திருமணம் முடிந்து புதுமண தம்பதியாக மாறிவிட்டது. பயணத்தின்போது, கோவாவிற்கு அடைந்த போது அங்கேயே வைத்து இந்த தம்பதியினர் தங்களது ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தினர். அதன்பின், கர்நாடகா மாநிலத்தின் உடுப்பியை கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அடைந்தனர்.

bride arrived on electric scooter

அதற்கடுத்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு அதே உடுப்பியில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. ஆம்பியர் நெக்ஸஸை பொறுத்தவரையில், மார்க்கெட்டில் இ.எக்ஸ் மற்றும் எஸ்.டி என்கிற 2 வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1,09,900 மற்றும் ரூ.1,19,900 ஆக தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தம்பதியினரின் முக்கிய நோக்கமே எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும். ஏனெனில், ஆம்பியர் நெக்ஸஸ் ஸ்கூட்டரை இதன் காரணத்தினால் தான் இந்த தம்பதியினர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டினர். அதேநேரம் திருமணத்தில் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக இந்த செயலில் ஈடுப்பட்டிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 19:52 [IST]
English summary
Bride arrived to her wedding on ampere electric scooter check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+