ரீல்ஸ் வீடியோ போட தெரிஞ்ச உனக்கு ஹெல்மெட் போடனும்னு தெரியல பார்த்தியா!! மணப்பெண் கோலத்தில் இதெல்லாம் தேவையா...

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை ஓட்டிய காரணத்தினால் மணப்பெண் என்று கூட பார்க்காமல் போலீஸார் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர். எங்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது? விதிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலம்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீஸார் வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக, இணையத்தில் வீடியோ வைரலானதினால் அபராதத்திற்கு உள்ளான சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அதாவது, ஏதோ ஓர் மூலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியதற்காக பலர் அபராதம் செலுத்தியுள்ளனர்.

bride fined in delhi

தவளை தன் வாயால் கெடும் என்பதைபோல், எங்கோ ஓர் மூலையில் நடந்ததை வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிட்ட காரணத்தினால் இவ்வாறு பலர் அபாரதத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவராகவே, டெல்லியில் மணப்பெண் ஒருவர் ரீல் வீடியோவிற்காக ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை இயக்கி உள்ளார். இந்த வீடியோ போலீஸாரின் பார்வையில் விழுந்ததை அடுத்து, அந்த மணப்பெண்ணுக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் இயக்கக்கூடாது என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். 2-வீலர்களில் பின்னால் அமர்பவர்கள் கூட ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கும் நிலையில், இவ்வாறு ரீல் வீடியோவிற்காக ஹெல்மெட் இன்றி டெல்லி போன்ற பரபரப்பான நகர்புற சாலையில் ஸ்கூட்டரை இயக்கியது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள கூடியது கிடையாது.

இதனால்தான் மணப்பெண் என்று கூட பார்க்காமல் போலீஸார் அபாரத்தை விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த இளம்பெண், மணப்பெண்ணின் ஆடையால் உள்ளதால், அவரது ஆடையின் துணி ஸ்கூட்டரின் சக்கரங்களில் சிக்கிவிடுமோ என்கிற பயமும், இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவை பார்க்கும்போது நமக்கு ஏற்படுகிறது. ஆடை சக்கரத்தில் சிக்க நேர்ந்தால், முற்றிலுமாக கண்ட்ரோல் இல்லாமல் போய்விடும்.

இவர் ஹெல்மெட்டும் அணியாமல் இருப்பதால், விபத்து மிகவும் பிரச்சனையில் சென்று முடிவதற்கும் வாய்ப்புள்ளது. இதனாலேயே இந்த விஷயத்தை கூடுதல் அக்கறை உடன் பார்த்த டெல்லி போலீஸார் இதுகுறித்து தங்களது டுவிட்டர் பக்கத்தில், "ஒரு ரீலுக்காக சாலையில் இவ்வாறு செல்வது உங்கள் பாதுகாப்பை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது! தயவு செய்து இவ்வாறான செயல்களில் ஈடுப்படாதீர்கள்! பாதுக்காப்பாக ஓட்டவும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய செயலில் ஈடுப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட மணப்பெண்ணுக்கு ரூ.6,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1,000 ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காகவும், ரூ.5,000 முறையான ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டியற்காகவும் ஆகும். ஆம்... இன்ஸ்டாவில் ரீல் வீடியோ போட தெரிந்த இந்த இளம்பெண்ணிடம் 2-வீலர் லைசன்ஸ் இல்லை. இந்த அபராத விபரங்களையும் டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நாம் பதிவிடும் வீடியோவை போலீஸார் என்ன பார்த்து கொண்டா இருக்க போகிறார்கள்? என்றே இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றனர். ஆனால் போலீஸார் இணையத்தில் வைரலாகும் ஒவ்வொரு வீடியோவை ஃப்ரேம் பை ஃப்ரேம் பார்க்கின்றனர் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அத்துடன் ரீல் வீடியோ மோகமும் நம் மக்களிடத்தே அதிகரித்து வருவதை கூறியாக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 15, 2023, 11:20 [IST]
English summary
Bride fined for riding scooter without license and helmet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+