அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!

சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக வைரல் வீடியோக்களை (Viral Videos) உருவாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதில் ஒரு சிலர் உருவாக்கும் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால் வேறு ஒரு சிலரோ, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை உருவாக்குகின்றனர்.

இதில், பொது சாலைகளில் மேற்கொள்ளப்படும் பைக் ஸ்டண்ட்கள் மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்த பலர் பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வரிசையில், போக்குவரத்து விதிகளை மீறி வரும் ஒரு பெண்ணை பற்றிய தொகுப்புதான் இந்த செய்தி. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், காஜல் டட்டா (Kajal Dutta) என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பிரபலம், மணப்பெண் கோலத்தில், கேடிஎம் ஆர்சி390 (KTM RC390) பைக்கை ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது.

Bride Riding KTM RC390

ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது, நிறைய பைக் ஸ்டண்ட் வீடியோக்களை எங்களால் காண முடிந்தது. இதில், பெரும்பாலான சமயங்களில் காஜல் டட்டா ஹெல்மெட் அணியாமல்தான் பைக் ஓட்டியுள்ளார். முகம் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, அவர் இப்படி செய்திருக்கலாம்.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், காஜல் டட்டா மணப்பெண் கோலத்தில் கேடிஎம் ஆர்சி390 பைக்கை ஓட்டியுள்ளார். உண்மையிலேயே அவருக்கு திருமணமா? அல்லது வித்தியாசமாக வீடியோ உருவாக்க வேண்டும் என்பதற்காக இப்படி உடை அணிந்து சென்றாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Helmet

ஆனால் பெரும்பாலான வீடியோக்களில், அவர் சேலை கட்டி கொண்டுதான் பைக் ஓட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, பொது சாலைகளில் ஸ்டண்ட் செய்வது போன்ற ஆபத்தான விஷயங்களை செய்து வரும் காஜல் டட்டா மீது காவல் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் இது மற்றவர்களுக்கு தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. அதாவது இவரை பார்த்து நிறைய பேர் இதுபோன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபட தொடங்கலாம் என்பது நெட்டிசன்களின் கூறி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதும், பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்வதும் மிகவும் ஆபத்தானது. இது காவல் துறை அதிகாரிகள் விதிக்கும் அபராதம் மட்டுமல்லாது, படுகாயம் மற்றும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதை அனைவரும் மனதில் கொள்வது நல்லது.

பைக் ஸ்டண்ட் செய்வதில் ஆர்வம் இருந்தால், தனியார் இடங்களில் பாதுகாப்பான முறையில் செய்யலாம். அதற்கு மாறாக பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவது என்பது, மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதை புரிந்து கொள்ளாமல், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

காஜல் டட்டாவை பொறுத்தவரையில், பைக் ஓட்டுவதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை நாங்கள் மதிக்கிறோம். குறிப்பாக சேலை கட்டி கொண்டு பைக் ஓட்டுவது என்பது சற்று சிரமமான காரியம். ஆனால் காஜல் டட்டா அதை திறம்பட செய்கிறார். எனினும் அவர் விதிமுறைகளை பின்பற்றி பைக் ஓட்டினால், இன்னும் நன்றாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2024, 19:02 [IST]
English summary
Bride riding ktm rc390 motorcycle viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+