ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!

கல்யாணமான கையோடு மணப்பெண் மாப்பிள்ளைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹன்டர் 350 பைக்கை சர்ப்ரைஸாக பரிசளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை பைக்கை பார்த்ததும் சந்தோஷத்தில் மூழ்கிய சம்பவமும் நடந்துள்ளது. இந்த வீடியோ குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக திருமணங்களில் புதிதாக திருமணமாகும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் சப்ரைஸாக பரிசளித்துக் கொள்வது இன்று டிரெண்டாக இருந்து வருகிறது. தனது துணைக்கு பிடித்த பரிசை அவருக்கு தெரியாமல் சர்ப்ரைஸாக கொடுப்பது என்பது ஒருவித ஆனந்தம் தான். அந்த பரிசை பார்த்ததும் அவர் முகத்தில் வரும் சந்தோஷத்தை வேறு எந்த தருணத்திலும் பார்த்து விட முடியாது.

Bride Surprise Groom with Royal Enfield Hunter 350

இதனால் பல திருமணங்களில் நாம் மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கு தங்க நகைகள் அல்லது மணப்பெண்ணுக்கு பிடித்தமான ஏதேனும் பொருட்களை பரிசளித்து நாம் பார்த்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு பரிசளித்துள்ளார். அதுவும் மாப்பிள்ளைக்கு பிடித்த பைக்கை வாங்கி அவருக்கு சர்ப்ரைஸாக கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவில் திருமணமானவுடன் மண அலங்காரத்திலேயே இருக்கும் மணமக்கள் மாப்பிள்ளைக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பதற்காக மணமேடையில் இருந்து இறங்கி வருகிறார்கள். அப்பொழுது மாப்பிள்ளையின் கண்ணை கட்டி மணப்பெண் மண்டபத்தின் வாசலுக்கு அழைத்து வருகிறார். அங்கு இவரது உறவினர்கள் எல்லாம் காத்திருக்கிறார்கள். பலர் இந்த தருணத்தை செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் குழம்பிப் போய் வந்து கொண்டிருக்கிறார்.

Bride Surprise Groom with Royal Enfield Hunter 350

அப்பொழுது வாசலில் ஒரு பைக் ஒன்று சிவப்பு நிற துணி கொண்டு மூடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பைக் அருகே மணமக்கள் வருகிறார்கள். அப்பொழுது மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மணப்பெண் மாப்பிள்ளையின் கண்ணில் கட்டியுள்ள துணியை அப்பொழுது அங்கு பைக் ஒன்று நிறுத்தி வைத்து விற்பதை பார்த்து மாப்பிள்ளை ஆச்சரியப்படுகிறார்.

பின்பு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து அந்த பைக்கை மூடப்பட்டிருந்த துணியை அகற்றுகிறார்கள். அப்பொழுது உள்ளே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹன்டர் 350 பைக் இருக்கிறது. இந்த பைக்கை பார்த்ததும் சந்தோஷத்தில் மூழ்கிய மாப்பிள்ளை இந்த சர்ப்ரைஸிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது புதிய மனைவியை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். இதை சுற்றி இருந்த உறவினர்கள் சந்தோஷத்துடன் பார்த்து ரசித்தனர்.

Bride Surprise Groom with Royal Enfield Hunter 350

இதன் பின்னர் மணப்பெண் தன்னை ஒரு ரைடு அழைத்து செல்ல சொல்லி கேட்க, மாப்பிள்ளையும் பைக்கில் ஏறி அமர்ந்து மணப்பெண்ணை பின்னால் உட்கார வைத்து ஒரு ரைடு செல்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் வாழ்க்கையிலும் இப்படியான தருணத்தை ஏற்படுத்த வேண்டும் என கருத்திட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.

வீடியோவில் உள்ள ராயல் என்ஃபீல்டு 350 பைக் என்பது இளைஞர்கள் பலரை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பைக் ஆகும். இன்று பலர் ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் கிளாசிக் 350, பைக்கை விட இந்த ஹண்டர் பைக்கை அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் இதன் ஸ்டைலான லுக் தான். இது மட்டுமல்லாமல் இது பொருத்தப்பட்டுள்ள அம்சங்களும் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது.

இந்த ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் இன்ஜினை பொருத்தவரை 349.34சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 36 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 20.2 பிஎஸ் பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை குறிப்பிட்ட இந்த வீடியோவில் உள்ள பைக் கேரள மாநிலம் நீலாம்பூர் பகுதியில் பதிவு செய்யப்பட்ட பைக்காகவும், அந்த பகுதியிலேயே இந்த பைக்கை வாங்கி இருந்தால் ஆன்ரோடு விலையாக ரூ2.11லட்சம் என்ற விலையில் தான் இந்த பைக்கை அவர்கள் வாங்கி இருக்க முடியும். தனது கணவனுக்கு கல்யாண பரிசாக மனைவி ரூ2.11லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசளித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திருமணங்களில் இது போன்ற காஸ்ட்லியான வாகனங்களை வாங்கி பரிசளிப்பது இது ஒன்றும் புதிது அல்ல. இருந்தாலும் இப்படியாக கணவன் கண்ணைக் கட்டி இந்த தருணத்தை வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்றிய மனைவியின் செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது தான். இது போன்று உங்கள் வாழ்விலும் ஏதாவது சர்ப்ரைஸ் ஆன நிகழ்வு நடந்திருந்தால் அது குறித்து கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 11:05 [IST]
English summary
Bride surprises groom with royal enfield hunter 350 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X