இனி Wrong ரூட்ல போவீங்க! டயரு மிஞ்சாது தம்பி.. செல்லாண் போட்டு ஓய்ந்து போனதால் அதிரடியில் களமிறங்கிய காவல்துறை

வர வேண்டிய பாதையில் போவது, போக வேண்டிய பாதையில் வருவது இதெல்லாம் நம் இந்திய வாகன ஓட்டிகளுக்கு மிகவும் கை வந்த கலை. சாதாரண நகர்புற சாலை தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வரை என இந்தியாவின் எல்லா சாலைகளிலும் இந்த போக்குவரத்து விதிமீறல் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

அந்த அளவு அசால்டாக வாகன ஓட்டிகளால் செய்யப்படும் ஓர் போக்குவரத்து விதிமீறலாகவே தவறான பாதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது இருக்கின்றது. இவ்வாறு வாகன ஓட்டிகள் செய்வதனால் மற்ற வாகனங்கள் செல்வதில் தடை ஏற்படுகின்றது. குறிப்பாக, சில நேரங்களில் மிகப் போக்குவரத்து நெரிசலுக்குக்கூட இது வழிவகுத்து விடுகின்றது.

Bmc installs tyre killer

எனவேதான் தவறான பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் காலர்களே தவறான பாதையில் வாகனங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் குறிப்பிட்ட நகரத்தில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'டயர் கில்லர்' எனும் கருவியே பொருத்தப்பட்டு இருக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள முக்கிய சாலையிலேயே இந்த கருவி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த கருவி ஒரு வழி பாதையை மட்டுமே அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தவறான திசையில் இருந்து ஏதேனும் வாகனம் வரும் எனில் அது முன்னேறி செல்ல அந்த கருவி அனுமதிக்காது.

Tyre killer

Image Courtesy: Sameer Markande அதையும் மீறி அந்த வாகனங்கள் பயணிக்கும் எனில் அது டயரை முழுமையாக கிழித்து காலி செய்துவிடும். சரி போற போக்குல பஞ்சர் போட்டுக்கலாம் என நினைத்தால் அதுவும் முடியாது. டயரை நாய் கொதறியதைவிட மிக மோசமாக சிதைத்துவிடும். அந்த அளவிற்கு திறன் கொண்டதே அந்த டயர் கில்லர் கருவி.

இதில் ஒரு முறை ஏற்றிய பின்னர் அடுத்த ஒரு அடிகூட நகர முடியாத அளவிற்கு அது டயரை மிக மோசமாக பாதிக்கச் செய்துவிடும். இதனால்தான் அதன் பெயர் டயர் கில்லர். அதாவது டயர் கொலைகாரன். இனி தவறான பாதையில் பயணிக்கும் செயலில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே இத்தகைய ஓர் கருவியை மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் பொருத்தி இருக்கின்றனர்.

மும்பையில் இதுபோன்ற ஓர் கருவி பயன்பாட்டிற்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆனால், இந்தியாவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. உபி-யின் நொய்டாவில் ஏற்கனவே இந்த அம்சம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது. தவறான ரூட்டில் பயணிப்பதற்கு எதிராக பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அந்த விஷயத்தில் மும்பை நகராட்சியால் முழுமையான தீர்வை எட்ட முடியவில்லை.

மேலும், இந்த பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் தவறான திசையில் பயணிப்பதாகவும், இதனால் கடும் நெருக்கடியான சூழல் ஏற்படுவதாகவும் புகார்கள் தொடர்ச்சியாக எழும்பிய வண்ணம் இருந்திருக்கின்றன. இந்த நிலையிவேயே அந்த போக்குவரத்து விதிமீறலை அப்பகுதியில் அடியோடு அழித்திட வேண்டி டயர் கில்லர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இது ஸ்பீடு பிரேக்கராகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இதனை இன்ஸ்டால் செய்ய மும்பை நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. செல்லாண்கள் வழங்குவதற்கு பதிலாக இதுபோன்ற ஓர் கருவியை கையில் எடுத்திருப்பது உண்மையில் வரவேற்க தக்கதே.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் செல்லாண்களைக் கண்டு அஞ்சுவதாக தெரியவில்லை. போலீஸார் முன்னிலையிலேயே போக்குவரத்து விதிமீறல்களில் வாகன ஓட்டிகள் சிலர் ஈடுபடுவதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே போக்குவரத்து விதிமீறல்களை அடியோடு அழிக்கும் முயற்சிகள் இந்தியாவில் தலையோங்கத் தொடங்கி இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 22, 2023, 16:31 [IST]
English summary
Brihanmumbai municipal corporation installs tyre killer to cut wrong side drive
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+