80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

Written By:

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர் மார்க் பீமோண்ட், சைக்கிளிலேயே உலகைச் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்த முதல் நபர் ஆவார். எனினும் இவரின் சாதனை வேறு ஒரு வீரரால் முறியடிக்கப்பட்டதால். தற்போது குறைந்த நாட்களில் சைக்கிளில் உலகைச் சுற்றி சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளார்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

சைக்கிளில் உலகை வலம் வருவது என்பதே மிகப்பெரும் சாதனையாக கருதப்படும் நிலையில், அதனை 80 நாட்களில் செய்துமுடிப்பது என்பது கேட்பவர்களை மலைக்க வைப்பதாக உள்ளது. ஆனால் தன்னால் அது முடியும் என்பதனை உறுதியாக நம்புகிறார் ஸ்காட்லாந்தின் மார்க் பீமோண்ட்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

இவர் சாதாரணமானவர் அல்ல, 1983ல் பிறந்த மார்க் சிறந்த நெடுந்தூர சைக்கிள் பந்தய வீரர் ஆவார். 2008ஆம் ஆண்டில் 29,446 கிலோமீட்டர்களை 194 நாட்களில் கடந்து அப்போது சைக்கிளிங் செய்து உலகை வலம் வந்த புதிய உலக சாதனையை படைத்தார்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

பின்னர் 2011ஆம் ஆண்டில் பிபிசி செய்திப்பிரிவின் ஆவணப்படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் 6 பேர் கொண்ட குழுவில் இணைந்து அட்லாண்டிக் பெருங்கடலை படகில் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

பின்னர், இதிலிருந்து மீண்டு, மீண்டும் சைக்கிளிங் மீது கவனம் செலுத்திய மார்க், 2015ல் தன்னந்தனியாக 42 நாட்களில் 10,000 கிமீ தூரத்தை சைக்கிளில் கடந்து தனிநபராக 10,000 கிமீட்டர்களை அதிவேகமாக சைக்கிளிங் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

இவர் முன்னதாக 2008ல் படைத்திருந்த உலக சாதனையை 2015ல் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ நிக்கல்சன் என்ற வீரர் 123 நாட்களில் செய்து முறியடித்தார். இந்த சாதனையை மீண்டும் தன் கைவசம் கொண்டுவர திட்டம் தீட்டியுள்ள மார்க் வரும் ஜூலை 1ஆம் தேதி தன் சைக்கிளிங் சாதனையை தொடங்க உள்ளார்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

இதற்காக கடந்த 3 ஆண்டுகாலமாக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் மார்க். ஆயினும் 80 நாட்களில் உலகை வலம் வருதல் என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகுந்த சோதனைதரக்கூடிய தாக இருக்கும்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 2ஆம் தேதி தனது பயணத்தை துவங்கும் மார்க், ஒரு நாளில் 16 மணி நேரங்கள் சைக்கிளிங் செய்து 380 கிமீ தூரம் கடக்க திட்டமிட்டுள்ளார். 80 நாட்கள் என்று திட்டம் இருந்தாலும் விமானப் பயணத்தில் சில நாட்களை செலவிட உள்ளதால் தனது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ய 75 நாட்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளார் இவர்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

80 நாட்களில் இவர் கடக்க உள்ள தூரம் கிட்டத்தட்ட 29,000 கிமீ ஆகும். 5 கட்டங்களாக தனது பயணத்தை மேற்கொள்ள உள்ள மார்க், 75 நாட்களில் சைக்கிளில் பயணம் செய்யவும், 3 நாட்களை விமானப் பயணத்திற்காகவும், இரண்டு நாட்களை அசம்பாவிதம் அல்லது உடல்நலக்குறைபாடு போன்றவற்றிற்காக ஒதுக்கியுள்ளார்.

 80 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வர ஒரு சாதனை முயற்சி

ஜூலை 2ஆம் தேதி பாரிஸில் தனது பயணத்தை துவங்க உள்ள மார்க், போலாந்து, சீனா, ரஷ்யா, மங்கோலியா, லித்யுவேனியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் வழியே தனது பயணத்தை தொடர்ந்து மீண்டும் பாரிஸில் வந்து முடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

English summary
Round The World in 80 days cycle challenge

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark