ஹோவர்பைக்கை உருவாக்கி அசத்திய இங்கிலாந்து இளைஞர்!

By Saravana

விரைவான போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் ஆகாய மார்க்கமே சிறந்ததாக இருக்கிறது. ஆனால், அது நீண்ட தூர பயணங்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கிறது. ஷாப்பிங் செல்வதற்கோ, சில கிலோமீட்டர் பயணத்துக்கோ ஆகாய மார்க்க போக்குவரத்து சரிப்படாத நிலை இருக்கிறது.

ஆனாலும், குறைந்த போக்குவரத்துக்கான ஆகாய மார்க்க சாதனங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனால், அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பெரு நிறுவனங்களின் கவனத்தை ஈர்ப்பதாக இல்லை. இந்தநிலையில், சில கண்டுபிடிப்பாளர்கள் தங்களது மூளையை கசக்கி, இதுபோன்ற சாதனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அதுபோன்று, இங்கிலாந்து இளைஞர் ஒருவர் தனது வீட்டிலேயே உருவாக்கிய அசத்தலான ஹோவர் பைக் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

ஹோவர் பைக்!

ஹோவர் பைக்!

ஹோவர் என முன் குறிப்பிடப்படும் சாதனங்கள் பொதுவாக தரைக்கு சிறிது மேலே அல்லது சில அடி உயரத்தில் பறக்கும் ஆகாய மார்க்க போக்குவரத்து சாதனங்களாக அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், பைக் போன்ற அம்சங்களை கொண்ட சாதனத்தை ஹோவர்பைக் என்று அழைக்கின்றனர்.

இங்கிலாந்து இளைஞர்

இங்கிலாந்து இளைஞர்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காலின் ஃபர்ஸ் என்பவர்தான் இந்த ஹோவர்பைக்கை உருவாக்கியவர். பல ஆயிரக்கணக்கானோர் பரிமாறிக்கொண்ட எண்ணங்கள், கருத்துருக்களின் அடிப்படையில்தான் இந்த ஹோவர்பைக் சாதனத்தை காலின்ஸ் உருவாக்கியிருக்கிறார்.

 எளிமையான டிசைன்

எளிமையான டிசைன்

ஆகாய மார்க்க சாதனங்களில் அதிக பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். எனவே,மிக சிக்கலான வடிவமைப்பும் தொழில்நுட்பத்தையும் கொண்டதாக இருக்கும். ஆனால், காலின்ஸ் உருவாக்கிய ஹோவர்பைக் மிக எளிமையானது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

காலின்ஸ் உருவாக்கிய ஹோவர்பைக்கின் இருக்கையின் முன்னும், பின்னும் இரண்டு பெரிய விசிறிகள் பொருத்தப்பட்டு, மோட்டார்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 மேலே எழும்பும் திறன்

மேலே எழும்பும் திறன்

மோட்டார்கள் உதவியுடன் தரை நோக்கிய அந்த இரண்டு பெரிய விசிறிகளும் இயக்கப்படும்போது, மெதுவாக பைக்கை மேலே எழுப்பி பறக்க வைக்கிறது.

பைக் சிறப்பம்சம்

பைக் சிறப்பம்சம்

பைக் போன்று அமர்ந்து செல்வதற்கான புட்ரெஸ்ட்டுகள், கைப்பிடிகள், மோட்டார்களை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

தடங்கல்கள்

தடங்கல்கள்

வெட்ட வெளியில் வைத்து தனது பைக்கை அடிக்கடி சோதனை செய்துள்ளார். அவ்வப்போது இந்த பைக் கீழே விழந்தும், பேலன்ஸ் குறைந்தும் இடர்பாடுகளை காலின்ஸ் சந்தித்தார்.

விடா முயற்சி

விடா முயற்சி

ஆனாலும், தனது விடாத முயற்சியால் இந்த பைக்கை அவ்வப்போது மேம்படுத்தி, மேம்படுத்தி வெற்றிகரமான ஹோவர்பைக்காக மாற்றியிருக்கிறார்.

மோட்டார்களின் திறன்

மோட்டார்களின் திறன்

இரண்டு மோட்டார்களும் தலா 70 எல்பிஎஸ் அல்லது 80 கிலோ எடையை மேலே தூக்கும் த்ரஸ்ட்டை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதாவது, 80 கிலோ எடையுடைய காலின்ஸ் எடையையும், பைக்கின் ஃப்ரேமையும் தூக்கிக் கொண்டு பறப்பதற்கு போதுமான த்ரஸ்ட் ஆற்றலை வெளிப்படுத்தும்.

எளிது

எளிது

எதிர்காலத்தில் இந்த பைக்கை மேம்படுத்தினால், சிறப்பான ஹோவர்பைக் மாடலாக இருக்கும்.

2017ல் ரிலீசாகும் ஏரோமொபில் பறக்கும் காரின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

2017ல் ரிலீசாகும் ஏரோமொபில் பறக்கும் காரின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

More from DriveSpark

Article Published On: Saturday, April 30, 2016, 13:26 [IST]
English summary
British Inventor Builds Homemade Hoverbike.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+