வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ 32 லட்சம் பில் போட்ட உபேர்... அப்புறம் நடந்தது தான் செம கூத்து...

உபேர் நிறுவனம் கணிணி தவறால் வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32.39 லட்சம் பில் போட்ட சம்பவம் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இன்று நம்மில் பலருக்கு ஆப் மூலம் கால் டாக்ஸிகளை புக்செய்து பயணிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக பெரு நகரங்களில் ஏராளமான மக்கள் இப்படியாக ஆப்களில் புக் செய்து பயணிக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை உபேர், ஓலா ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் இந்த ஆப் மூலம் கேப் சேவைகளை அதிகமாக வழங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆப்கள் மூலம் கேப்களை புக் செய்து வருகின்றனர்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இப்படியாக கேப் புக் செய்த ஒருவருக்கு சமீபத்தில் 15 நிமிட பயணத்திற்கு ரூ32.39 லட்சம் உபேர் நிறுவனம் பில் போட்டுள்ளது. இது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதை தான் நாம் இங்கே தெளிவாக காணப்போகிறோம். உடனே பயந்துவிடாதீர்கள். இந்த சம்பவம் ஒன்றும் இந்தியாவில் நடக்கவில்லை இங்கிலாந்தில் நடந்தள்ளது.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இங்கிலாந்தின் மேன்செஸ்டர் பகுதியில் இருப்பபவர் ஓலிவர் கப்லன், 22 வயதான இவர் ஒரு உணவு விடுதியில் பயிற்சி செஃப்பாக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாக பணி முடிந்ததும் அங்கிருந்து தான் தங்கியிருக்கும் இடத்திற்கு கேப் புக் செய்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதே போல தான் கடந்த சில நாட்களுக்கு முன்பும் உபேர் ஆப் மூலம் கேப் புக் செய்துள்ளார்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இவர் கேப் புக் செய்யும் போது இவர் செல்ல வேண்டிய இடத்திற்கு தோராயிரமாக அந்நாட்டின் பண மதிப்பில் 10.84 பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ950 என காட்டியுள்ளது. அவரும் புக்கிங்கை உறுதிசெய்து பயணத்தை யும் முடித்துள்ளார். வழக்கமாக அந்நாட்டில் உபேர் ஆப்பில் பயணத்தை முடித்தால் அந்நிறுவனம் நேரடியாக பயணம் செய்தவரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கழித்துக்கொள்ளும். இதனால் இவரும் பயணத்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இந்த பயணம் வெறும் 15 நிமிடங்கள் தான் இருந்தது. பின்னர் வீட்டிற்கு சென்று அவர் தன் வேலைகளை முடித்து தூங்கி எழந்து பாரத்த் போது தான் அவரது செல்போனில் அவருக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவரது செல்போனிற்கு உபேர் நிறுவனம் 35477 பவுண்ட் பணம் அதாவது இந்திய மதிப்பில் ரூ32.39 லட்சம் பில் அனுப்பியுள்ளது. இந்த பணம் கடந்த நாள் அவர் செய்த 15 நிமிட பயணத்திற்கான பில் எனவும் இதை கட்ட வேண்டும் எனவும் அவருக்கு வந்த தகவலில் குறிப்பிட்டிருந்தது.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த ரைடு குறித்து செக் செய்துள்ளார். முந்தைய நாள் 15 நிமிடம் பயணித்த ஒரே ரைடிற்காக இவ்வளவு பில்லா என அதிர்ந்த இடர் உடனடியாக இது குறித்து உபேர் நிறுவனத்திடம் பேசியுள்ளார். அந்நிறுவனம் இது குறித்து அவர்களிடம் உள்ள தகவலை சோதித்துள்ளது. அப்பொழுது தான் பிரச்சனையே புரிந்துள்ளது. இவர் புக் செய்யும் போது ஒரு பப் பெயரை குறிப்பிட்டு அந்த பகுதிக்கு செல்லவேண்டும் என புக்கிங் செய்துள்ளார்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

அப்பொழுது ஆஸ்திரேலியா நாட்டிலும் அதே பெயரில் ஒரு பப் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அவர் பயணம் செய்ததாக கணிணி தானவே கணக்கிட்டு அதன் தூரத்தை அளவிட்டு அதற்கான கட்டணத்தை பில்லாகஅச்சடித்து அவருக்கு அனுப்பியுள்ளது. பொதுவாக இந்த கணிணி பயணிகளின் வங்கி கணக்கிலிருந்து இந்த பணத்தை கழித்துக்கொள்ளும்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

ஆனால் ஓலீவரின் வங்கி கணக்கில் அவ்வளவு பணம் இல்லாததால் பணத்தை கழிக்க முடியாமல் அவருக்கு பணத்தை செலுத்த சொல்லி தானியங்கியாக மெசேஜ் வந்துள்ளது. இதன் பின்னர் இந்த பில்லை கேன்சல் செய்யது விட்டு அவரது பயணத்திற்கு மட்டும் காசு செலுத்தும்படியான ஒரு பில்லை மாற்ற அந்நிறுவனம் தற்போது முயற்சித்து வருகிறது.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இப்படியாக தவறான பில்லிங் முறை நடப்பது இது முதல் முறை அல்லது கடந்த 2020ம் ஆண்டும் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளுது. இதில் ஒரு பிரிட்டிஷ் மாணவருக்கு 1536 பவுண்ட் அதாவது ரூ1.39 லட்சம் பில்லிங் செய்யப்ட்டுள்ளது. இதுவும் இப்படியாக தவறான டெஸ்டினேஷனால் நடந்துள்ளது. ஆனால் இதில் அவர் பயணத்தின் போதே தவறான இடம் மாறி 250 மைல் சென்ற பின்பு தான் இவருக்கு தெரிந்துள்ளது. அதுவரை இவர் கேப்பில் ஏறி தூங்கிவிட்டார் என்பது தான் சுவாரஸ்யமான தகவல்.

வெறும் 15 நிமிட பயணத்திற்கு ரூ32 லட்சம் பில் போட்ட உபேர் . . . அப்புறம் நடந்தது தான் செம கூத்து . . .

இப்படியாக உங்களுக்கும் தவறான பில் வராமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கேப்பில் புக் செய்யும் முன்பு நீங்கள் செல்லும் இடத்தை சரியாக தேர்வு செய்யவும், கவனக்குறைவாக தேர்வு செய்தால் இவ்வறான பில்லிங் வர வாய்ப்பு இருக்கிறது. இதே போல கேப் பயணம் முடிந்ததும் அதற்கான பணம் எவ்வளவு வந்துள்ளது என்பதை செக் செய்து கொள்ளவும், இதுவும் மிகவும் முக்கியமான ஒன்று பலர் இதை செக்செய்யாமல் அதிக பணத்த இழந்துள்ளனர்.ஒரு வேளை தவறான பில்லிங் மூலம் அதிக தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள முடியும்.

Article Published On: Monday, October 10, 2022, 19:09 [IST]
English summary
British man charged by uber for 32 lakh for 15 min travel
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+