1000க்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியவர்... பி.எம்.டபிள்யூ கார் எல்லாம் இவரது சேவைக்கு கம்மி தான்

பி.எம்.டபிள்யூ (BMW), உலகளவில் பிரபலமான லக்சரி கார் நிறுவனம். இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்துக்கு அடுத்து, அதிக பேர் தேர்வு செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பல்வேறு கார்கள் பிரபலமானவைகளாக உள்ளன. அவற்றுள் ஒரு கார் தான், 7 சீரிஸ் (7 Series) ஆகும். இந்த நிலையில் இந்த காரை பிரபல தனியார் தொழில் கல்வி நிறுவனத்தின் சிஇஓ வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பள்ளி, கல்லூரியில் படித்தது போதாது இப்போதெல்லாம் வேலையில் சேர்வதற்காகவே தனியாக அந்த வேலை தொடர்பான படிப்பினை கற்கும் பழக்கம் சமீப காலமாக இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் என்று மட்டுமின்றி, ஏற்கனவே வேறொரு வேலை பார்த்து வருபவர்கள் கூட தனக்கு பிடித்த வேலையில் சேர்வதற்காக அவ்வாறான படிப்புகளை கற்கின்றனர்.

nikhil kilivayil buys bmw 7-series

இதனால், தொழில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இப்போதைய டிரெண்ட்டிற்கும், எதிர்காலத்திற்கும் ஏற்ற வேலைக்கான படிப்புகளை கட்டணத்துடன் வழங்குவதுதான் இன்றைய தொழில் கல்வி நிறுவனங்களின் முதன்மையான நோக்கமாக உள்ளது. அவ்வாறான தொழில் கல்வி நிறுவனங்களுள் ஒன்றுதான், புரோடோடைப் (Brototype) ஆகும்.

கேரளாவில் தோன்றிய இந்த தனியார் கல்வி நிறுவனம் தற்போது சென்னையிலும் அதன் கிளையை கொண்டுள்ளது. வெப் டெவெலப்மெண்ட், மொபைல் ஆப் டெவெலப்மெண்ட், சைபர் பாதுகாப்பு, கேம் டெவெலப்மெண்ட், டேடா சயின்ஸ், பிளாக்செயின் என இன்றைய கால மாடர்ன் உலகிற்கு தேவையான படிப்புகளையும், பயிற்சிகளையும் வழங்கக்கூடிய புரோடோடைப் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பவர் நிகில் கிளிவாயில் (Nikhil Kilivayil).

nikhil kilivayil buys bmw 7-series

இவர்தான் தற்போது புதியதாக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை வாங்கியுள்ளார். குடும்பத்துடன் ஷோரூமுக்கு வந்து பிராண்ட்-நியூ 7-சீரிஸ் காரை நிகில் கிளிவாயில் டெலிவிரி பெறும் வீடியோவை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், நிகிலின் கருப்பு நிறத்திலான 7-சீரிஸ் காரை காணலாம்.

இந்தியாவில் 7-சீரிஸ் காரை கார்பன் பிளாக் மெட்டாலிக், பிளாக் சாப்பையர் மெட்டாலிக் என 2 விதமான கருப்பு நிற ஆப்ஷன்களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் எந்த கருப்பு நிறத்தில் இந்த காரை நிகில் கிளிவாயில் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

nikhil kilivayil buys bmw 7-series

இந்த இரு கலர் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, இண்டிவிட்யூவல் டான்ஸானைட் ப்ளூ மெட்டாலிக், இண்டிவிட்யூவல் டிராவிட் கிரே மெட்டாலிக், ப்ரூக்ளின் கிரே மெட்டாலிக், ஆக்ஸைடு கிரே மெட்டாலிக், மினரல் வெள்ளை மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த செடான் ரக கார்கள் எப்போதுமே பார்ப்பதற்கு அழகானவை. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரும் உள்பட. ரூ.1.80 கோடி என்கிற விலையில் விற்பனை செய்யப்படும் இத்தகைய காரை வாங்கியிருப்பதில் இருந்து புரோடோடைப் நிறுவனத்தின் சிஇஓ நிகில் கிளிவாயிலின் தற்போதைய பொருளாதார நிலையை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 21:29 [IST]
English summary
Brototype ceo nikhil kilivayil buys bmw 7 series luxury car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X