திடீரென தடை விதித்து அதிரடி... இந்த வண்டிகளை எல்லாம் ரோட்ல பாக்கவே கூடாது... ஒரே போடாய் போட்ட அரசு!
காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதால், அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. எனவே அங்கு காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது.

இதன்படி டெல்லியில் தற்போது அனைத்து பிஎஸ்-3 மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்கள் அனைத்திற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியவாசிய மற்றும் அவசர பணிகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது என கூறப்படுகிறது.

அதாவது டெல்லியில் தற்போது காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் டெல்லி அரசு தற்போது இந்த அதிரடியான உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதால், கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் டீசல் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி கொண்டன.

இதில், மாருதி சுஸுகி நிறுவனம் முக்கியமானது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது. அந்த நிறுவனத்தில் இருந்து தற்போது டீசல் கார்களை வருவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலிலும் கூட, டெல்லி அரசு தற்போது பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவால் டெல்லியில் மட்டும் சுமார் 5 லட்சம் கார்கள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்போது காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளதால், பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும், வழக்கமான எரிபொருளில் இயங்கும் ஐசி இன்ஜின் வாகனங்களில் இருந்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பி வருகின்றன. எனவே இந்தியாவில் தற்போது பல்வேறு செக்மெண்ட்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கின்றன.

கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் ஒரு சில எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதாவது அந்த அளவிற்கு நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் மீதும் தற்போது கார் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சமீப காலமாக இந்தியாவில் மிகவும் அதிகமான அளவில் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் ரக கார்களின் அறிமுகத்தை நம்மால் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications








