திடுதிப்புனு 20 ஆயிரம் அபராதம் போட்றாங்க! அரசின் அதிரடி உத்தரவால் கதிகலங்கி போன மக்கள்! பேசாம நடந்தே போயிரலாம்

உலகில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட அதிக நகரங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தொழிற்சாலைகளும் மற்றும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களும் இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன.

காற்று மாசுபாடு பிரச்னை தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் (Delhi), காற்று மாசுபாடு பிரச்னையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, போர்க்கால அடிப்படையில் மிகவும் தீவிரமான முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

திடுதிப்புனு 20 ஆயிரம் அபராதம் போட்றாங்க! அரசின் அதிரடி உத்தரவால் கதிகலங்கி போன மக்கள்! பேசாம நடந்தே போயிரலாம்
Image used for representation purpose only

இதன் ஒரு பகுதியாக தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, டெல்லி சாலைகளில் வரும் டிசம்பர் 9ம் தேதி (December 9) வரை பிஎஸ்3 பெட்ரோல் (BS3 Petrol) மற்றும் பிஎஸ்4 டீசல் (BS4 Diesel) நான்கு சக்கர வாகனங்களை இயக்க முடியாது. இந்த வாகனங்களை இயக்குவதற்கு டெல்லி அரசு தற்காலிகமாக தடை (Ban) விதித்துள்ளது.

இந்த தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ''பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை டெல்லி சாலைகளில் இயக்குவது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்டம், 1988-ன் பிரிவு 194-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ், வாகன உரிமையாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதிக்க முடியும்'' என டெல்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருவதால்தான், அரசு இந்த அதிரடி நடவடிக்கைளை எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் டிசம்பர் 9ம் தேதி வரை தடை என்று மட்டுமே அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும் நீட்டிக்கப்படலாம். டெல்லியில் காற்றின் தரம் மேம்படுகிறதா? இல்லையா? என்பதை பொறுத்து, இது தொடர்பான முடிவை அம்மாநில அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த தடை உத்தரவை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கு போக்குவரத்து சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த உத்தரவு வெளியான உடனேயே, டெல்லி டாக்ஸி மற்றும் டூரிஸ்ட் போக்குவரத்து சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. டெல்லியை ஆளும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தலைமையிலான ஆம் ஆத்மி (Aam Aadmi) அரசை கண்டித்து போராட்டங்களை நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி அரசின் உத்தரவு தங்களது தொழிலை பாதிக்கும் என்பதால், போக்குவரத்து சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று என டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரசு இப்படி வாகனங்களுக்கு தடை விதிப்பது இது முதல் முறை அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கடந்த காலங்களிலும் இது போன்ற நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்துள்ளது. அத்துடன் இந்த உத்தரவை மீறியவர்கள் மீது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல், கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே இம்முறையும் இந்த உத்தரவு மிகவும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் மத்தியில் இந்த எச்சரிக்கை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bs3 petrol bs4 diesel vehicles ban till december 9
Story first published: Tuesday, December 6, 2022, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X