பி.எஸ். 3 Vs பி.எஸ்.4: எந்திரவியல் வேறுபாடுகள் மற்றும் கட்டுப்பாடு அலகுகள்

பி.எஸ். 3 எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களை பி.எஸ். 4 தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற வழிமுறை உண்டா என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பலரும் தங்களது சுற்றுப்புறத்தை பாதுகாப்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மக்களின் இந்த முயற்சியில் இந்திய அரசும் கைக்கோர்த்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுகுறைபாடில் வாகனங்களுக்கு அதிக பங்குள்ளது என்பதால், மாசுக்கட்டுபாடு கொண்ட பி.எஸ். 4 (Bharat Stage 4 norms) எஞ்சினை அனைத்து ரக வாகனங்களில் பொருதப்படவேண்டும் என சமீபத்தில் மத்தியரசு உத்தரவு பிறப்பித்தது.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

மத்தியரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றது.

ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள பி.எஸ். 3 எஞ்சினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வாகனங்களின் விற்பனை தேக்கம் அடைந்துள்ளன. பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏப்ரல் 1க்கு மேல் இனி விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது. இதனால் டீலர்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான தடை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தாலும். உற்பத்தியை தான் குறைக்க முடியுமே தவிர தயாரிக்கப்பட்ட வாகனங்களை என்ன செய்வது? இதுதான் இன்றைய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உள்ள பெரிய கேள்வி.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

மார்ச் 31 கடைசி நாள் தான் என்றாலும், இன்றே வாகனங்களை பெற்று, பதிவு செய்து சாலைகளில் பயன்படுத்தி விட முடியுமா? இல்லை. அது அசாதாரணமான ஒன்று. பி.எஸ். 3 எஞ்சினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களின் நிலை தான் என்ன? அதற்கான மாற்று வழி ஏதேனும் உள்ளதா? பி எஸ். 3 மற்றும் பி.எஸ். 4 எஞ்சின்களுக்குள்ள வேறுபாடுகள் தான் என்ன?

வாசகர்களுக்கு இதுகுறித்த எளிதான புரிதல் ஏற்பட வாகனங்களை 4 விதமாக பிரித்து விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்கள்

இரு சக்கர வாகனங்கள்

பி.எஸ். 3 எஞ்சின்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருப்பதில், இரு சக்கர வாகனங்களுக்கே அதிக பாதிப்பு. அதனால் தான் இன்று இருசக்கர வாகனங்களை அதிரடியாக விற்று தள்ள பல நிறுவனங்கள் அதிக தள்ளுபடி சலுகைகளுடன் சாலைகளில் கடை விரித்துள்ளன.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

பி.எஸ்.3 எஞ்சினிலிருந்து பி.எஸ்.4 எஞ்சின்களுக்கு இருசக்கர வாகனங்கள் வேறுபடுவது புகை கக்கும் குழாய்களில் தான். இது எளிதாக தெரிந்தாலும், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களில் பி.எஸ். 4 எஞ்சின்கள் பொருத்தப்படுவது என்பது மிகக் கடினமான பணி.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

அதற்கு நாம் வண்டியை மீண்டும் தாயரித்து விடலாம். காரணம், பி.எஸ்.4 எஞ்சினின் செயல்குறையில் வாகனங்களிலிருந்து புகை வெளியேறுதல் மட்டுமல்லாமல், எரிவாயு டேங்குகளில் திரவங்கள் ஆவியாதலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வண்டிகளில் உள்ள எரிவாயுவை வெளியேற்றும் குழாய்கள், பிரேக்கேட்ஸ் என அனைத்தையும் நாம் புணரமைக்க வேண்டும்.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

எரிவாயுவிலிருந்து தீங்கு நிறைந்த நைட்ரஜன் வாயுவை நீக்க பி.எஸ். 4 மோட்டார் சைக்கிள்களில் அதிக திறன் படைத்த வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) தேவைப்படுகின்றன. அதேபோல சில வாகனங்களில் தீங்கு நிறைந்த நைட்ரஜனை வெளியேற்ற இயற்கை வாயுவும் (oxygen) தேவைப்படுகிறது.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

அதற்கான இரண்டாம் கட்ட காற்றுவெளியேறுதல் அமைப்பு விணையூக்கி மாற்றிகளுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ளது. அதனால் தயாரிக்கப்பட்ட ஒரு வண்டியை மீண்டும் பி.எஸ். 4 எஞ்சின் கொண்ட வாகனமாக மாற்றுவது கடினமான செயல்முறை.

பெட்ரோல் எரிவாயுவில் இயங்கும் பயணிகள் மற்றும் எஸ்.யூ.வி வாகனங்கள்

பெட்ரோல் எரிவாயுவில் இயங்கும் பயணிகள் மற்றும் எஸ்.யூ.வி வாகனங்கள்

பெட்ரோல் பயன்பாட்டில் இயங்கும் எஞ்சின்கள் இந்தியாவில் எப்போதோ பி.எஸ். 4 தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. காரணம் பெட்ரோல் எஞ்சின்கள் உட்புற எரி (internal combustion) அமைப்பை கொண்டு இயங்குவதால். பெட்ரோல் எஞ்சின்கள் பி.எஸ்.4க்கு மாற்றப்படுவது எளிதானதாக உள்ளது.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

மேலும் பெரும்பாலான பெட்ரோல் எஞ்சின்கள் டர்போசார்ஜிடு திறன் கொண்டு உள்ளதால், அவ்வகை வாகனங்களை பி.எஸ். 4 என்சின் கொண்டு உருவாக்குவதில் எளிய நடைமுறைகள் சாத்தியமாகிறது.

டீசல் எரிவாயூவில் இயங்கும் பயணிகள் மற்றும் எஸ்.யூ.வி வாகனங்கள்

டீசல் எரிவாயூவில் இயங்கும் பயணிகள் மற்றும் எஸ்.யூ.வி வாகனங்கள்

டீசல் எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் குறைவு தான் என்பதால் பி.எஸ்.3 எஞ்சின்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளில் இவைகளுக்கு பெரியளவில் பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

டீசல் ரக வாகன உற்பத்தியில் இந்தியாவில் கோலோச்சுவது மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் தான். அவை பெரும்பாலும் தங்களது தயாரிப்புகளை ஏற்கெனவே விற்பனை செய்திருக்கும். பெரும்பாலான வண்டிகள் பழைய மாடல்களாகவும் இருக்கும்.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

மேலும் பி.எஸ். 4 எஞ்சின் கொண்ட வாகனங்களை ஏற்கனவே மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளதால், டீசலில் இயங்கும் பி.எஸ். 3 வாகனங்களின் விற்பனை இந்த அறிவிப்பில் பாதிப்படைவது குறைவே.

கனரக (கமர்ஷியல்) வாகனங்கள்

கனரக (கமர்ஷியல்) வாகனங்கள்

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பி.எஸ்.3 எஞ்சினிலிருந்து, பி.எஸ்.4க்கு மாற்றுப்படுவதில் சிறிய அளவிலான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, கனரக வாகனங்களை பொருத்தவரை அது நடக்கவே நடக்காது.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

இதை மனைதில் வைத்து தான் பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் மின்னணு கட்டுப்பாட்டு அலகு பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம் வாகனத்தின் அனைத்து இயக்கங்களுக்கான அடிப்படைகளுமே மாற்றியமைக்கப்படும்

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களால் ஏற்படும் மாசுகுறைப்பாட்டை தடுக்க பெரியளவிலான வினை ஊக்கிகள் இல்லை. சத்தத்தை குறைக்கூடிய நாயிஸ் கண்ட்ரோல் மஃப்ளர் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

தற்போதைய அறிவிப்பின் மூலம், பி.எஸ். 4 எஞ்சின் கொண்ட கனரக வாகனங்கள் அனைத்திலும் வினையூக்கி மாற்றிகள் அல்லது டீசல் ஆக்ஸைடு கேட்டலிஸ்ட் (DOC) இடம்பெற்றிருக்கும். அதனால் மாசுகுறையாடு ஏற்படுவது தடுக்கப்பட்டும்.

வாகனங்களை பி.எஸ். 4 எஞ்சினில் மாற்றியமைப்பது சாத்தியமா?

இதுதவிர இன்னும் பெரியளவிலான கனரக வாகனங்களில் (கண்டெயினர்) ஐரோப்பா நாடுகளில் நடைமுறையில் உள்ள தேர்ந்தெடுத்தக்கப்பட்ட வினையூக்கி தொழில்நுட்பம் (Selective Catalytic Reduction) இடம்பெறும். இதனாலும் கனரக வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது தடுக்கப்படும்

Article Published On: Friday, March 31, 2017, 14:19 [IST]
English summary
BS 3 to BS 4 requires on board diagnostics OBD 2 ports. Petrol powered passenger vehicles will meet BS4 the easiest. Commercial vehicles and two wheelers will find it hard to retrofit tech
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+