சாதாரணமா வந்து பைக்கை வாங்கும் இந்த நபர் இவ்வளவு பெரிய ஆளா!! அடையாளமே தெரியல...

பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் அதன் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் புக் செய்தவர்களுக்கு நாடு முழுவதும் டெலிவிரி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் செல்வாக்கான ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. யார் அந்த நபர் என்பதையும், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டை போன்று பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் இந்தியாவில் நுழைந்த பைக் நிறுவனம், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். சுதந்திரம் பெற்ற பின்பும் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த பிஎஸ்ஏ பைக்குகளின் விற்பனை 1970ஆம் சமயத்தில் படிப்படியாக நிறுத்திக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்தியாவில் பிஎஸ்ஏ பைக்குகள் விற்பனை செய்ய துவங்கப்பட்டுள்ளன.

gold star 650 to prince

முதல் பிஎஸ்ஏ பைக்காக கோல்டு ஸ்டார் 650 அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் இந்த பைக் 2021ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது. ஜாவா, யெஸ்டி பிராண்ட்களை போன்று இந்தியாவில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பிஎஸ்ஏ பைக்குகளின் விற்பனை மற்றும் சர்வீஸ்களை கவனித்துக் கொள்ள உள்ளது. கோல்டு ஸ்டார் 650 பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வரும் நிலையில், டெலிவிரிகளும் முக்கியமான நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல் பைக்கை உதய்பூர் சமஸ்தானத்தின் இளவரசர் லக்‌ஷயராஜ் சிங் மெவார் டெலிவிரி பெற்றுள்ளார். இந்த இளவரசரிடம் பல்வேறு கிளாசிக் கார் கலெக்‌ஷன்ஸ் உள்ளது. மேலும், விலையுயர்ந்த பைக்குகளையும் வாங்கி சேகரிப்பதில் இளவரசர் லக்‌ஷயராஜ் சிங் மெவார் ஆர்வம் கொண்டவர்.

gold star 650 to prince

இவரது பைக் கலெக்‌ஷனில் புதியதாக பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 இணைந்துள்ளது. இந்த பைக் டெலிவிரி நிகழ்ச்சி உதய்பூரில் உள்ள இளவரசரின் இருப்பிடத்தில் நடத்தப்பட்டு உள்ளது. உதய்பூர் இளவரசரின் அரண்மனையை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி உள்ளது. அந்த வகையில், இளவரசர் லக்‌ஷயராஜின் மற்ற வாகனங்களுடன் இந்த பிஎஸ்ஏ பைக்கையும் அனைவராலும் நேரில் காண முடியும்.

இதுகுறித்து உதய்பூர் இளவரசர் லக்‌ஷயராஜ் சிங் மெவார் கூறுகையில், "பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் சிறந்த கலவையாகும். செழுமையான வரலாற்றை கொண்ட வாகனங்களை நான் எப்பொழுதும் போற்றுவேன். மேலும், கோல்டு ஸ்டார் 650 சிறந்த பாரம்பரியம் மற்றும் நவீன கைவினைத்திறனை குறிக்கிறது. இந்த பிரத்யேகமான மோட்டார்சைக்கிளை எனது சேகரிப்பில் சேர்ப்பது ஒரு மரியாதை, அங்கு வாகன வரலாற்றை உருவாக்கிய மற்ற வாகனங்களுடன் இது நிற்கும்" என்றார்.

gold star 650 to prince

பிரிட்டிஷ் பைக்குகளுக்கே உண்டான கிளாசிக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள கோல்டு ஸ்டார் 650 பைக் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பைக் கிளாசிக்கான தோற்றத்தில் இருந்தாலும், உள்ளே வழங்கப்பட்டு இருப்பது அனைத்தும் மாடர்ன் டெக்னாலஜிகள் ஆகும். இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.99 லட்சமாக உள்ளது.

இந்த பைக்கில் 652சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 45.6 பிஎஸ் மற்றும் 55 என்.எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. பிரெம்போ பிரேக்குகள், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், அலுமினியம் எக்ஸ்சல் ரிம்கள், பைரெல்லி டயர்கள் மற்றும் மாடர்ன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கியுள்ள பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு இளவரசர் லக்‌ஷயராஜ் சிங் மெவார் போன்றரது ஆதரவு அவசியமான ஒன்றாகும். இந்த நிகழ்வு உதய்பூரில் பிஎஸ்ஏ பைக்குகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க உதவும். சுமார் 50 வருடங்களுக்கு பிறகு வந்தாலும், இப்போதும் பிஎஸ்ஏ பைக்குகளுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 16:41 [IST]
English summary
Bsa motorcycles delivers gold star 650 to prince of udaipur rajasthan
மேலும்... #BSA #BSA Goldstar 650 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X