பட்ஜெட்டில் ஆட்டோமொபைலை மறந்து போன நிதியமைச்சர்! என்ன இப்படியாகிடுச்சு...
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற பின்பு தாக்கல் ஆகும் முதல் பட்ஜெட்டாக இன்று 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செட்டில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம்பெற்றிருந்தன என்ற தகவலை பலர் தேடி வருகிறார்கள்.
மத்திய அரசின் தாண்டு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாருக்கு பெரிய அளவில் எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை என்ற தகவல் தான் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. ஓரிரு மறைமுக அறிவிப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை. இது குறித்த விளக்கமான வீடியோவை கீழே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபேம் 3 மானியம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஃபேம் 3 மானிய திட்டம் இன்னும் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்பதால் இது குறித்த அறிவிப்பு வெளியாகாது என ஏற்கனவே மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்து இருந்தார்.

அதேபோல இன்றைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் குறித்த எந்த விபரமும் வெளியாகவில்லை. அதே நேரம் ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் இறக்குமதிக்கான வரியில் மாற்றம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆட்டோமொபைல் செக்டாருக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








