1000 வாலா பட்டாசு மாதிரி வெடிக்கும்னு பார்த்தா நமத்து போன பட்டாசு மாதிரி ஆகிடுச்சு பட்ஜெட்!

இன்று பாராளுமன்றத்தில் 202425 நிதியாண்டிற்க்கான முழு பட்ஜெட் தாக்கலான நிலையி,ல் இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டார் குறித்த பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்ற வருத்தமான செய்தி வெளியாகி உள்ளது. மிகப்பெரிய அளவில் இந்த பட்ஜெட்டை ஆட்டோமொபைல் செட்டாரில் உள்ள நிறுவனங்கள் எதிர்பார்த்த நிலையில், இதில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், இந்நிறுவனங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் மிகப்பெரிய அளவில் வளர்சி அடைந்து வருகிறது. உலகில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறி உள்ளது. அதனால் இந்தியாவில் அடுத்தடுத்து ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியை பெருக்கவும் அதே நேரம் இந்திய மக்கள் எளிமையாக வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கவும் திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

budget 2024

குறிப்பாக இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் விற்பதற்காக ஃபேம் 3 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மானியம் குறித்த அறிவிப்புகள் வெளியானால் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக பலராலும் பேசப்பட்டது. ஆனால் ஏற்கனவே மத்திய அமைச்சர் குமாரசாமி இது குறித்து அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகாது என தெளிவாக கூறியிருந்தார்.

அவர் கூறியபடி தற்போது பட்ஜெட்டில் ஃபேம் 3 மானியம் குறித்து எந்த தகவல்களும் இடம் பெறவில்லை. அடுத்ததாக இந்தியாவில் விற்பனையாகவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஸ்டிராங் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரி குறைப்பு குறித்த அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மட்டுமே இருக்கிறது.

budget 2024

அதனால் இந்த பட்ஜெட்டில் ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி குறைப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்புகளும் வெளியாகவில்லை. மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு குறித்த இறக்குமதி வரி குறைப்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்த வரிகள் எல்லாம் குறைக்கப்பட்டு இருந்த நிலையில் இதில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது குறித்த அறிவிப்புகளும் தற்போது வெளியாகவில்லை. அடுத்ததாக பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகள் எல்லாம் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவும் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்க வேண்டிய முடிவு என்பதால் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இப்படியாக ஆட்டோமொபைல் செக்டாரில் எதிர்பார்க்கப்பட்ட எந்த அறிவிப்புகளும் பெரிய அளவில் வெளியாகவில்லை.

budget 2024

இதனால் இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கலக்கத்தில் இருக்கின்றன. ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஃபேம் மானியத்தின் இரண்டாம் கட்டம் கடந்த மார்ச் மாதமே நிறுத்தப்பட்ட நிலையில், இடைக்காலமாக மானியம் வழங்கப்பட்டது. இதுவும் வரும் 31ம் தேதி உடன் முடிவுக்கு வருகிறது. இதன் பிறகு இது நீட்டிக்கப்படுமா அல்லது புதிய ஃபேம் 3 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு ஃபேம் 3 மானியம் குறித்த தயாரிப்புகளை துரிதப்படுத்தி வருவதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாகும், ஆனால் இதில் பெரிய அளவில் எந்த சலுகைகளும் இருக்காது. மானியத்தை விட குறைவான சலுகை தான் வழங்கப்படும் என்ற எண்ணமும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஸ்டிராங்க் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரி சலுகை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும்போது அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட ஹைபிரிட் வாகனங்களின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாருக்கு எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் வராவிட்டாலும் பட்ஜெட்டுக்கு பிறகான சில கூட்டங்களுக்கு பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம்ஃபேம் மானியம் குறித்து அறிவிப்பும் அதன்பின்னர் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரி குறைப்பு குறித்து அறிவிப்புக்கும் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் கிடைத்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 13:39 [IST]
English summary
Budget 2024 auto sector no big announcements full details
மேலும்... #off beat #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X