பெட்ரோல் வண்டிய தூக்கி போடுங்க!மத்திய பட்ஜெட்டில் இவிகளுக்கு தான் முக்கியத்துவம்!
அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட இடைக்கால பட்ஜெட் தாக்கல் என்பது எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த கட்டுமானங்களை விரிவுபடுத்துவதில் இந்தியா பெரும் முனைப்பு காட்டும் என தெரிவித்துள்ளார். இதன்படி அவர் எலக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு பயன்பாட்டிற்கு வரும் என்பதை குறிப்பிட்டு அதற்கான கட்டுமான வசதிகளை செய்வதை மத்திய அரசு உறுதி செய்யும் என கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அவர் பேசும்போது ஆட்டோமொபைல் செக்டாரில் முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டுமானம் குறித்து மிக முக்கியமான விஷயம் ஒன்றை அறிவித்தார். அதன்படி இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

ஆட்டோமொபைல் துறையில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை தான் மிக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் அதைத்தான் ஊக்கம் செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் மிக குறைவான மாசுவை ஏற்படுத்தும் வகையிலான வாகனங்களாகவும் அதே நேரம் மக்களுக்கு ஏற்ற வாகனங்களாகவும் இருக்கும் என்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை தான் அரசால் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் அதை சார்ஜ் செய்வதற்கான கட்டுமான வசதி இந்தியாவில் இல்லை. பெட்ரோல் வாகனங்களில் எப்படி நாம் நீண்ட தூரம் பயணிக்கும் போது ஆங்காங்கே பெட்ரோல் பங்குகளில் நிறுத்தி பெட்ரோல் போடுகிறோமோ அதே போல் எலெக்ட்ரிக் கால்களை பயன்படுத்த முடியாது.

வீட்டில் இருக்கும் போது முழுமையாக சாட்சி செய்துவிட்டு கிளம்பினாலும் சார்ஜ் தீரும்போது தேவையான இடங்களில் பெட்ரோல் போடுவது போல சார்ஜ் போடும் வசதி தற்போது இந்தியாவில் இல்லை. இதனால் சார்ஜிங் கட்டுமானத்தை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் நீண்ட தூரம் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிப்பவர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பயணிக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் இந்த சார்ஜிங் கட்டுமானத்திற்காக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு வழங்கப்பட்டு அவர்கள் வேலைவாய்ப்பில் அமர்த்தப்படுவார்கள் என்றும் இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மேலும் இந்தியாவின் தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்காக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் சார்ஜிங் கட்டுமானம் செய்யும் தொழில் அமைக்க விரும்புபவர்களுக்கு அரசு உதவி செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் பொது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வரும் 2020-ம் ஆண்டிற்குள் ஒரு துளி மாசு கூட ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து வசதிகளை செய்யும் என்ற நோக்கத்தோடு எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் என பட்ஜெட்டில் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்தடுத்த திட்டங்கள் எல்லாம் மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதிய நிதி அமைச்சர் பேச்சில் இது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் இது குறித்து அடுத்த அறிவிப்புகள் பின்னர் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. வாகனங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரியில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 இடைக்கால பட்ஜெட் என்பது ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மையமாகக் கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெரும் என்ற நோக்கத்தில் அரசு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த திட்டங்களை தான் அதிகம் அறிவித்துள்ளன. இதனால் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









