ஏராளமான எக்ஸ்பிரஸ் வே வரப்போகுது! பட்ஜெட்ல இந்த விஷயத்தை எல்லாம் கவனிச்சீங்களா?

பாராளுமன்றத்தில் இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிக்காக ரூபாய் 2.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த 2023-ம் ஆண்டு எவ்வளவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு செலவினம் செய்யப்பட்டுள்ளது. எந்த வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற விரிவான விவரங்களை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அரசின் நாட்டின் உட்பட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் பாரத் மாலா பரியோஜனா என்ற திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதலாக துவக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பாதுகாப்பான மற்றும் வசதிகள் நிறைந்த சாலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டது.

budget 2024 on bharatmala

இந்த திட்டத்தின் கீழ் தொழிற்சாலை உள்ள பகுதிகள் மாநில தலைநகரங்கள் மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளை இணைக்கும் வகையில் சாலைகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அமைப்பாக இருக்கிறது.

இந்த 2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் 36 சதவீதம் பட்ஜெட் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1.99 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 2.7 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலை துறை இடத்திற்கான பட்ஜெட்டும் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 1.41 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 1.62 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

budget 2024 on bharatmala

இந்த பட்ஜெட்டில் இந்தியாவில் 34,800 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 15,045 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆண்டு 26,418 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் கட்டமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 4.1 லட்சம் கோடி ரூபாய் பாரத் மாலா பிரயோஜனா என்ற திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

இந்த பாரத் மாதா பிரயோஜனா திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சாலை கட்டமைப்பு வசதிகளால் இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து நேரம் என்பது குறையும் சரக்குகளை விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். அது மட்டுமல்லாமல் அதைக் கொண்டு செல்வதற்கான செலவும் வெகுவாக குறையும். இது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தி தரும்.

budget 2024 on bharatmala

இந்த சாலைகள் இந்தியாவில் உள்ள பொருளாதாரம் மண்டலங்களை இணைக்கும் வகையில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் சாலை கட்டமைப்பிற்காக அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டது பலரது வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா சாலைகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்று வருகிறது. உலகத்தரமான சாலைகளை கட்டமைத்து போக்குவரத்தை சீராக்கி வருகிறது.

இந்த பட்ஜெட்டில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஏதேனும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து இந்த அறிவிப்புகளும் இல்லை. இருந்தாலும் சாலை கட்டமைப்புகளை அதிகப்படுத்தினாலே விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. பாதுகாப்பான சாலைகளை கட்டமைப்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

இந்தியாவில் சாலை கட்டுமானம் என்பது மிக முக்கிய தேவையாக இருக்கிறது. பல்வேறு நகரங்கள் தற்போது தரமான சாலைகள் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் எக்ஸ்பிரஸ் ஆலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சாலை போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்ற நாடாக மாறி இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இருக்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முழு வளர்ந்த நாடு என்றால் அந்த நாட்டிற்கான சாலை கட்டமைப்பு என்பது மிக முக்கிய தேவையாக இருக்கும். சாலைகள் சரியாக இருக்கும் நாடு தான் பொருளாதார அளவில் சிறந்த நாடாக இருக்க முடியும். உள்நாட்டு போக்குவரத்து என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 1, 2024, 19:19 [IST]
English summary
Budget 2024 bharatmala road infrastructure highlights
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X