பெட்ரோல் வாகனத்தை இனி ஒரு பய வாங்க மாட்டான்! பிப்.1 தேதி மத்திய பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தயாராகி வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாரில் என்னென்ன அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது என்ற தகவல்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் பட்ஜெட் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சியையும் இந்தியா மக்களுக்கு கிடைக்கப் போகும் திட்டங்கள் குறித்தும் இந்த பட்ஜெட் தான் முடிவு செய்யும் என்பதால் இந்த பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் நாள் என்று இது குறித்த செய்திகள் மிகப் பரபரப்பாக பேசப்படும்.

budget 2024 expectations

இப்படியாக இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி முதல் ஆட்டோமொபைல் செக்டார் வரை மிகப் பெரிய அளவிலான அறிவிப்புகள் எல்லாம் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் மூலம் வரும் தேர்தலில் மத்திய அரசு தனக்கான வாக்குகளை ஈர்ப்பதற்கான வழிகளை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன செக்டார் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன இதனால் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மிக முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

budget 2024 expectations

மத்திய அரசு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்கவும் பசுமையான எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்கவும் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆட்டோமொபைல் செக்மென்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிக அளவிலான பட்ஜெட்டை பெறும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்தது. 72 சதவீதமான பட்ஜெட் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ 2000 கோடி பட்ஜெட்டில் ரூ 1600 கோடி எலெக்ட்ரிக் டூவீலர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதில் மிகப்பெரிய சவால்கள் இருந்தன. அதற்கான கட்டுமானத்தை கொண்டு வருவது பெரும் சிக்கலாக இருந்து வந்தது.

budget 2024 expectations

அதே நேரத்தில் இந்த ஃபேம் மானியம் மூலம் பொது போக்குவரத்தில் ஏற்ற வாகனங்களின் வருகை அதிகரித்தது. பல மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பொது போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த ஃபேம் மானியத்தை மீண்டும் தொடர இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிவிப்புகளை பொறுத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடுத்ததாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி என்பது அதிகமாக இருக்கிறது எனவும் அதை குறைக்க வேண்டும் எனவும் எெலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க இது உதவும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இது குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு குறையும்.

இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி மிகப் பெரிய அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களால் வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உரிமம் வழங்குதல் பாதுகாப்பு அம்சங்கள் அதற்கான இன்சூரன்ஸ் குறித்த தமிழக அரசின் பாலிசி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக இந்தியாவிலேயே பேட்டரிகளை தயாரிக்க பேட்டரி தயாரிப்பு ஆலைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகள் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் தனது முகத்தை மாற்றிக் கொண்டே வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. டூவீலர் செக்மென்ட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமான விற்பனையை பெற்று வருகின்றன. விரைவில் கார்களின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான அறிவிப்புகள் தான் அதிகம் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 27, 2024, 14:18 [IST]
English summary
Budget 2024 expectations india ev manufacturing sector strengthening
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X