பட்ஜெட் வாசிக்க நிதியமைச்சர் நிர்மலா எந்த காரில் வந்தார் பார்த்தீங்களா? இதுல இப்படி ஒரு குறியீடு இருக்குதா?

இன்று மத்திய பட்ஜெட் பராளுமன்றத்தில் தாக்கலான நிலையில், மத்திய நிதியமைச்சர் இன்று அறிவித்துள்ள அறிவிப்புகள் குறித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் பட்ஜெட்டிற்கு முன்பு அவர் பட்ஜெட் அறிக்கையுடன் பராளுமன்றத்திற்கு எந்த காரில் வந்தார் என்ற தகவலும் தற்போது வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக முக்கிய பொருாளாதார வளர்ச்சி பெறும் நாடான இந்திய நாட்டின் நிதியமைச்சர் சாதாரண காரில் பட்ஜெட் வாசிக்க வந்திறங்கினார். இவர் வந்த கார் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைபற்றியது. இந்நிலையில் 3வது முறை ஆட்சியில் முதல் பட்ஜெட் இன்று தாக்கலாகியுள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகின. இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்றத்திற்கு என்ன காரில் வந்தார் என்பது தான்.

Budget 2024

இந்தியா போன்ற ஒரு நாட்டின் நிதியமைச்சர் என்றால் அவர் உலகின் மிக முக்கியமான நிதியமைச்சர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நினைத்தால் எவ்வளவு காஸ்ட்லியான கார்களிலும் வர முடியும். பென்ஸ், பிஎம்டபிள்யூ என சொகுசு கார்களிலும் அதிக பாதுகாப்பு அம்சம் நிறைந்த காரையும் இவரால் பயன்படுத்த முடியும். ஆனால் இவர் பட்ஜெட் கார்களில் ஒன்றை தான் பயன்படுத்தியுள்ளார்.

நிர்மலா சீத்தாராமன் இன்று பாராளுமன்றத்திற்கு சாதாரணமாக மாருதி நிறுவனத்தின் சியாஸ் காரில் வந்திறங்கினார். இந்த கார் ஒரு பட்ஜெட் ரக செடான் காராக பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ள்ளது.

Budget 2024

இந்த கார் மார்கெட்டில் ரூ10 லட்சம் முதல் ரூ15 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இது சாதாரண ரக கார் தான். இதில் அடிப்படையான வசதிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் சொகுசு வசதிகள் எதுவும் கிடையாது. இந்த காரில் வந்திறங்கியது மூலம் அவர் சூசகமாக சொகு கார்கள் எல்லாம் இந்தியாவிற்கு தேவையில்லை, பட்ஜெட் கார்களே பெஸ்ட் என சொல்ல வருவதாக சிலர் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இவரிடம் இந்த மாருதி சியாஸ் காரை தவிர அம்பாஸிட்டர் காரை இவர் அடிக்கடி பயன்படுத்துவதையும் நம்மால் அடிக்கடி பார்க்க முடிந்தது. பொதுவாக அரசு பதவியில் இருப்பவர்கள் அமைச்சர்களுக்கு ஒரு காலத்தில் அம்பாஸிட்டர் கார்கள் அரசால் வழங்கப்பட்டது. அதனால் அந்த கார்களில் ஒன்றை இவர் பயன்படுத்துவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஆனால் ஹிந்துஸ்தான் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டே இந்த அம்பாஸிட்டர் கார் தயாரிப்பை நிறுத்திவிட்டது. இந்நிலையில் அரசும் தற்போது அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிக தொழிற்நுட்பம் அம்சங்கள் நிறைந்த கார்களை வழங்க துவங்கிவிட்டன. தற்போது அம்பாஸிட்டர் காரின் பயன்பாடு அரசு அதிகாரிகள் மத்தியில் குறைந்துவிட்டது என சொல்லலாம்.

தற்போது டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார்கள் அதிகம் வாங்கப்பட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.இதில் ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் பயணிக்க முடியும் என்பதால் இந்த ரக வாகனங்களை தான் பிரதிநிதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த காரை கூட நிதியமைச்சர் பயன்படுத்தவில்லை.

இன்று செடான் கார்களின் விற்பனை கணிசமாக அளவு குறைந்துவிட்டது. மாருதி நிறுவனத்தை பொருத்தவரை சியாஸ் காரை மிட்-சைஸ் செடான் காராக விற்பனை செய்து வருகிறது. செடான் கார்கள் தற்போது சமூகத்தில் தனக்கு ஒரு அந்தஸ்து வரவேண்டும் என்பதற்காக வாங்கப்படும் கார்களாக உள்ளன. இதனால் இதன் விற்பனை எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய நிதியமைச்சர் இவ்வளவு சிம்பிளான காரில் வந்திறங்கியது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது பலருக்கு இந்தியா பட்ஜெட் விஷயத்தில் எந்த அளவிற்கு சிக்கினமாக இருக்கிறது என்பதை காட்டும் ஒரு குறியீடாகவும் உள்ளதாக பலர் பேசி வருகின்றனர். இந்த கார் பற்றி பலர் தற்போது பேசி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். .

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 12:05 [IST]
English summary
Budget 2024 fm nirmala sitharaman car collection maruti ciaz
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+