இந்த கார்களின் விலை தரைமட்டத்துக்கு குறைய போகுது! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! பட்ஜெட்டில் வருது குட் நியூஸ்!

உத்திரபிரதேச மாநில அரசு சமீபத்தில் ஸ்டிராங் ஹைபிரிட் வாகனங்களுக்கான வாகன பதிவு வரியை முற்றிலுமாக ரத்து செய்தது. இது மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரும் பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் ஹைபிரிட் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியாக இந்த பட்ஜெட்டில் ஹைபிரிட் வாகனங்கள் குறித்து என்னென்ன எதிர்பார்ப்புகள் எல்லாம் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் ஃபேம் என்ற மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த மாநிலத்தின் மூன்றாம் கட்டம் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்ற பேச்சு இருக்கும் நிலையில், இந்த மானியங்கள் ஹைபிரிட் வாகனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற பேச்சும் இருக்கிறது. இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்து இது குறித்த பரிந்துரையை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.

budget 2024

இது மட்டுமல்லாமல் ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகவும். பிளக்ஸ் ஃபியூயல் வாகனங்களுக்கான வரியை 12 சதவீதமாகவும் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன் வைத்திருந்தார். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் சமீபத்தில் ஸ்டிராங் ஹைபிரிட் வாகனங்களுக்கான பதிவு வரியை முற்றிலுமாக ரத்து செய்தது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஏற்கனவே உத்தரபிரதேச மாநில அரசு ஹைபிரிட் வாகனங்களுக்கான அறிவிப்பு வெளியிட்ட பிறகு, இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹைபிரிட் வாகனங்களை டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் தான் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றன. உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த அறிவிப்பை ஹுண்டாய், டாடா, மஹிந்திரா, ஆகிய நிறுவனங்களும் வரவேற்றுள்ளன.

budget 2024

தற்போது இந்தியா முழுவதும் விற்பனையாகவும் ஹைபிரிட் வாகனங்களுக்கு சாதாரண வாகனங்களை போல 28% ஜிஎஸ்டி வரி மற்றும் கூடுதலாக, 15 சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சகம் இந்த வரியை ஐந்து சதவீதமாக குறைத்து கூடுதலாக வசூலிக்கப்படும். 15 சதவீத செஸ் வரியையும் முற்றிலுமாக நீக்க யோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனால் தற்போது ஹைபிரிட் வாகனங்களுக்கு விதிக்கப்படும் 43 சதவீத வரி என்பது இனி 15 சதவீதமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படி குறைந்தால் ஹைபிரிட் வாகனங்களில் விலை பெட்ரோல் வாகனங்களின் விலையை விட வெகுவாக குறைந்துவிடும். தற்போது பெட்ரோல் வாகனங்களுக்கு 48% வரை வரி விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

budget 2024

இதுபோக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவில் என்னதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வந்தாலும், கடந்த ஓரிரு மாதங்களில் விற்பனை கொஞ்சம் சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த மே மாதம் மொத்தம் 7,887 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த ஜூன் மாதம் 6,888 வாகனங்கள் தான் விற்பனையாகியுள்ளது. கிட்டத்தட்ட 1000 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு உயரம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தியா முழுவதும் மொத்தம் விற்பனையாகும் வாகனங்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த விற்பனையை அதிகரிப்பதற்கு கண்டிப்பாக சலுகைகள் தேவை என்பதால் இது குறித்து எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுபோக ஃபேம் 3 மானியத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இடைக்கால பட்ஜெட் விரைவில் தாக்கலான உள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த அறிவிப்புகள் எல்லாம் வெளியானால் அடுத்த ஓராண்டில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் கார்களை விட ஹைபிரிட் கார்கள் அதிகமாக விற்பனையாக சாத்தியக்கூறுகளும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 17:11 [IST]
English summary
Budget 2024 hybrid vehicles incentive boost details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X