பட்ஜெட் 2024ல் இவிகள் விலை குறைய இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்களா? சூசக தகவலால் அடித்த ஜாக்பாட்!

இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் லித்தியம் என்ற மூலப் பொருளுக்கான அடிப்படை சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல செய்தார். மொத்தம் 25 விதமான மினரல்களுக்கு இந்தியாவில் சுங்க வரியை ரத்து செய்யவும், இரண்டு மினரல்களுக்கு சுங்க வரியை குறைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வாகனங்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை உட்பகுத்தி வருகிறார்கள். எதிர்காலத்தில் மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை தான் அதிகம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

budget 2024

இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்லபடியாக இயங்க வேண்டும் என்றால், அதற்கு முக்கியமான தேவை அதன் பேட்டரி தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் பெரும்பாலும் லித்தியம் அயான் என்ற மூலப்பொருளை கொண்டு தான் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை லித்தியம் அயான் என்ற மூலப்பொருளை மைனிங் செய்யும் ஆலைகள் பெரிய அளவில் இல்லை. இந்தியாவிற்கு தேவையான அளவு லித்தியம் அயான் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்கும் ஆலைகள் தற்போது ஆங்காங்கே துவங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் வெளிநாட்டிலிருந்து தான் லித்தியம் போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அதன் மூலம் பேட்டரிகளை தயாரித்து வருகின்றன. இந்த ஆலையில் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தயாரிக்கப்படும் பேட்டரிக்கு தேவையான மூலப்பொருளுக்கு இறக்குமதி செய்யப்படும்போது வரி விதிக்கப்படுகிறது.

budget 2024

இதுவரை லித்தியம் என்ற மினரலை இந்தியாவில் இறக்குமதி செய்தால் அதற்கு 15 சதவீதம் அடிப்படை சுங்க கட்டணம், 18 சதவீதம் அதற்கான ஐ ஜிஎஸ்டி மற்றும் சமூக நல சர்சார்ஜ் என்ற பெயரில் 10% வரியாக விதிக்கப்படுகிறது. இது போக 1 சதவீதம் லேண்டிங் சார்ஜும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ரூபாய் நூறு மதிப்பிலான லித்தியம் என்ற மினரலை இறக்குமதி செய்தால் 49 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில் இதில் அடிப்படை சுங்கவரியை தற்போது முழுமையாக நீக்குவதாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்கள். இதனால் இனி ரூ100 மதிப்பிலான லித்தியம் மினரலை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தால் பெரும் ரூ30 மட்டும் தான் வரியாக செலுத்த வேண்டும். இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் செலவு குறையும். லித்தியம் அயான் பேட்டரி விலை ஒரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது நேரடியாக இவி வாகன விலையை குறைக்க வாய்ப்பு குறைவு தான்.

பலரும் எதிர்பார்க்கும் அளவுக்கு பெரிய அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். லித்தியம் என்ற மூலப்பொருளின் விலை ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன விலையின் குறிப்பிட்ட ஒரு பகுதிதான். அதில் குறிப்பிட்ட வரி மட்டுமே நீக்கப்பட்டுள்ளதால் அதற்கு தகுந்தார் போல் மட்டுமே விலை குறையும். இது நேரடியாக வாகன விலையில் பிரதிபலிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

இந்தியாவில் லித்தியம் என்ற மூலப்பொருள் பேட்டரி பயன்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பேட்டரி பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்தியாவில் லித்தியம் மூலப்பொருள் கிடைப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதை எடுக்கும் வரை வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கிறது.

இதுபோக தற்போது பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பேட்டரிகளையே நேரடியாக இறக்குமதி செய்துதான் தங்கள் வாகனங்களில் பொருத்தி வருகிறார்கள். தற்போது தான் ஒரு சில நிறுவனங்கள் இந்தியாவில் பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக தான் கடந்த பட்ஜெட்டிலேயே லித்தியம் அயான் பேட்டரிகளை தயாரிக்கும் உதிரி பாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லித்தியம் போன்ற மினரல்களுக்கு வரி விதிப்பை குறைத்துள்ளதன் மூலம் இது நேரடியாக எலெக்ட்ரிக் வாகன விலையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. இதனால் எதிர்காலத்தில் லித்தியம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்பில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை குறைப்பதன் மூலமும் அல்லது நேரடி பேட்டரி இறக்குமதிக்கான வரியை குறைப்பதன் மூலமும் விலை குறை வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 15:50 [IST]
English summary
Budget 2024 tax exemption for lithium cobalt import
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+