பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வரப்போகுதா? பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகளை எல்லாம் எதிர்பார்க்கலாம்!
2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இதற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் செட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற பேச்சுக்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை குறைக்க அறிவிப்புகள் வழியாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய கார்களை ஸ்கிராப் செய்வதற்கான திட்டங்கள் குறித்து அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வரும் 23ம் தேதி பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கலான நிலையில் முழு பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாரில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

முக்கியமாக இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக அரசு பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கான ஃபேம் மானியம் மூன்றாம் கட்ட அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் குமாரசாமி ஃபேம் 3 மானியம் குறித்த திட்டம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். எனவும் பேசியுள்ளார். இதனால் இந்த அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்பு குறைவு தான். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இதுபோக ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டிய முடிவு என்பதால் அது குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு குறைவு தான். இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது இந்தியாவில் காற்று மாசுக்கு மிக முக்கியமான காரணம் பழைய வாகனங்களை தொடர்ந்து மக்கள் பயன்படுத்தி வருவது தான்.
இதை குறைப்பதற்காக ஏற்கனவே மத்திய அரசு வாகன ஸ்க்ரப்பிங் பாலிசியை செயல்படுத்தி வருகிறது. இந்த ஸ்க்ராப்பிங் பாலிசியில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வழியாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கான அதிக முதலீடு மற்றும் ஸ்க்ராப்பிங் செய்யப்படும் வாகனங்களுக்கான அதிக சலுகைகள் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை ஸ்கிப்பிங் செய்ய அனுமதி இருக்கிறது.

இது போக பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்து அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மட்டுமே இருப்பதால் இது குறித்த சூசகமான தகவல்கள் மட்டுமே பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இதனால் மாநில அரசுகளின் வருமானம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே நேரம் பெட்ரோல் டீசல் எல்லாம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்துவிட்டால் அதன் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது. இது குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது போக ஹைபிரிட் வாகனங்களுக்கான வரிசலுகை குறித்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. தற்போது ஹைபிரிட் வாகனங்களுக்கு அதிகமான வரி விதிக்கப்படும் நிலையில் இப்படியான வாகனங்கள் மாசுவை குறைவாக ஏற்படுத்துவதால் இதன் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் கூட வெளியாக வாய்ப்புள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024-ஆம் ஆண்டு புதிதாக அரசு பதவி ஏற்ற உடன் அறிவிக்கப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த தேர்தல் வெற்றியை கொடுத்த மக்களுக்கு பரிசளிக்க பல்வேறு விதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதில் ஆட்டோமொபைல் செக்டார் மிகப்பெரிய அளவில் பலன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









