ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

புகாட்டி நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

புகாட்டி நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ஹைப்பர் கார் உற்பத்தி நிறுவனமான புகாட்டி, செராமிக் எடிசன் ஒன் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை வெளியிட்டுள்ளது. பர் ஸ்போர்ட், டிவோ மற்றும் லீ நொய்ரோ ஆகிய வாட்ச்கள் இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

இந்த ஸ்மார்ட்வாட்ச்களுக்கு, இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக புகாட்டியும் இருந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். கடந்த காலங்களில் கவர்ச்சிகரமான கார்கள் பலவற்றை புகாட்டி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

அது தற்போதும் தொடர்ந்து வருகிறது. நமது மனதை கொள்ளை கொள்ள செய்யும் ஏராளமான கார்களை புகாட்டி நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகிறது. தற்போது தனது பிரபலமான கார்களின் புதிய வேரியண்ட்கள் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை உருவாக்கும் பணியில் புகாட்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

உலகின் மிகவும் வேகமான கார்கள் பலவற்றை புகாட்டி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவற்றின் செயல்திறன் காரணமாக, அந்த கார்கள் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகவும் இருக்கின்றன. இதன்படி புகாட்டி வெரோன் காரின் விலையானது, 13.84 கோடி ரூபாயில் இருந்துதான் தொடங்குகிறது.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

அதே சமயம் புகாட்டி சிரோன் கார், 21.13 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் புகாட்டி டிவோ காரின் விலை 39.35 கோடி ரூபாயாக உள்ளது. இவை அனைத்தையும் விட புகாட்டி லா வொய்ச்சூர் நொய்ரே காரின் விலை 87.46 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும்.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

இவ்வளவு கோடி ரூபாய்களை கொட்டி கொடுத்து புகாட்டி கார்களை வாங்குவது என்பது அனைவராலும் இயலாத காரியம். எனவே புகாட்டி கார்களை வாங்க முடியாவிட்டால், புகாட்டி ஸ்மார்ட்வாட்ச்களை வாங்குவதற்கு முயற்சி செய்யலாம். ஏதாவது ஒரு புகாட்டி தயாரிப்பை வாங்க நினைப்பவர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச்கள் நல்ல தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

ஆஸ்திரியாவை சேர்ந்த விட்டா வாட்ச்கள் நிறுவனத்துடன் இணைந்து புகாட்டி நிறுவனம் இந்த வாட்ச்களை தயாரிக்கிறது. இவை லக்ஸரி ஸ்மார்ட்வாட்ச்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் ஒவ்வொன்றும் வாட்ச் தயாரிப்பு நிபுணர்களால் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிட்டாக வேண்டிய விஷயமாகும்.

ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த புகாட்டி... ஆரம்ப விலையை கேட்கும்போதே அடி வயிறு கலங்குது... எவ்ளோ தெரியுமா?

புகாட்டி கார்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவராலும் புகாட்டி கார்களை சொந்தமாக்க முடியாது. எனவே நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஏதாவது ஒரு புகாட்டி தயாரிப்பை சொந்தமாக்க வேண்டும் என நினைக்க கூடிய இளைஞர்களுக்கு இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் நல்ல தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Ceramique Edition One Smartwatches Revealed - Here Are All The Details. Read in Tamil
Story first published: Tuesday, June 1, 2021, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X