உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

உலகப்புகழ் பெற்ற இடத்தில் இரண்டு விலை உயர்ந்த கார்கள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. இதில், பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். ஓட்டுனர்களின் கவனக்குறைவுதான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த வகையில் தற்போது நடைபெற்றுள்ள சாலை விபத்து ஒன்று கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

மிகவும் விலை உயர்ந்த போர்ஷே 911 (Porsche 911) மற்றும் புகாட்டி சிரோன் (Bugatti Chiron) ஆகிய இரண்டு கார்களும் ஓவர்டேக் செய்யும் போது எதிர்பாராதவிதமாக மோதி கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கோட்ஹார்டு பாஸ் பகுதியில், இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சாலை விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஒரு நபர் மட்டும் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான காணொளியை விடிஹெச் ஆட்டோமோட்டிவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

இந்த விபத்து காரணமாக போர்ஷே 911 மற்றும் புகாட்டி சிரோன் ஆகிய இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதில், போர்ஷே 911 காரின் முன் பகுதி நொறுங்கி விட்டது. அதன் முன் பக்க சக்கரங்கள் சிதைந்து விட்டன. கார் கேரியர் ட்ரக்கில் ஏற்றி போர்ஷே 911 கார் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

அதேபோல் புகாட்டி சிரோன் காரும் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆனால் அதன் முன் பகுதி மட்டும்தான் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மற்றபடி காரில் குறிப்பிடும்படியாக வேறு எங்கும் சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக கோட்ஹார்டு பாஸ் சுமார் 3 மணி நேரம் மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

விபத்தில் சிக்கிய இரண்டு கார்களுமே விலை உயர்ந்தவை என்பதால், இது விலை உயர்ந்த மோதல் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த சாலை விபத்து நடைபெற்ற இடமான கோட்ஹார்டு பாஸ் உலகப்புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாகும். மலைச்சாலையான இதில், வளைவு, நெளிவுகளும், ஏற்ற, இறக்கங்களும் மிகவும் அதிகம்.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

எனவே சாகச பயணங்களை மேற்கொள்ள விரும்பக்கூடியவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக கோட்ஹார்டு பாஸ் திகழ்கிறது. இது போன்ற சவாலான இடங்களில் வாகனங்களை ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஓவர்டேக் செய்யும்போது தவறு நடக்காமல் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

உலகப்புகழ் பெற்ற இடத்தில் நடந்த விலை உயர்ந்த மோதல்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்...

போர்ஷே 911 மற்றும் புகாட்டி சிரோன் ஆகிய இரண்டுமே மிகவும் விலை உயர்ந்த கார்கள். தற்போது அந்த கார்களை சரி செய்வதற்கு அதன் உரிமையாளர்கள் அதிக தொகையை செலவிட வேண்டியதிருக்கும். ஓவர்டேக் செய்யும்போது ஏற்பட்ட சிறிய அலட்சியம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்? என்பதற்கு இந்த விலை உயர்ந்த மோதல் ஒரு உதாரணம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bugatti Chiron-Porsche 911 Crash In Switzerland. Read in Tamil
Story first published: Saturday, August 15, 2020, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X