சூப்பர் கார் ஓனர்களுக்கு ஏற்ற அப்பார்மென்ட்! புகாட்டியை வீட்டுக்குள்ளயே பார்க் பண்ணலாம்!
புகட்டி காருக்காக தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் லிஃப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் எப்பொழுதும் கண் பார்வையில் படும்படி வீட்டிற்குள்ளேயே நிறுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி லிஃப்ட் வழங்கப்படவுள்ளது. இந்த அப்பார்மெண்ட் கட்டிடம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
புகாட்டி போன்ற காரை வாங்குவதே பெரும் பணக்காரர்களுக்கே கனவு போன்ற விஷயம். இதன் விலையும் சரி பராமரிப்பு செலவுகளும் சரி கோடி கணக்கில் இருக்கும். இதனால் பெரும் கோடீஸ்வரர்கள் கூட இந்த காரை வாங்கச் சற்று யோசிப்பார்கள். இந்த காரை வாங்குவதை விட அதைப் பத்திரமாக பார்க்கிங் செய்வது தான் பெரிய விஷயமாகவே இருக்கும்.

இந்த காரை வாங்குபவர்கள் பெரும் நகரத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் வேண்டும் என்றால் அதன் செலவே ஜாஸ்தியாக இருக்கும். பொதுவான பார்க்கிங்கில் புகாட்டி காரை பார்க்கச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அதைப் பார்க்கவே கூட்டம் சேரும் அது மட்டுமல்ல காருக்கும் பாதுகாப்பு இருக்காது.
இந்த பிரச்சனையை உணர்ந்த துபாயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று பிரத்தியேகமாக ஹைப்பர் லக்ஸரி அப்பார்மெண்ட் ஒன்றைக் கட்டியுள்ளது. தூபாயின் மையயப்பகுதியில் இது கட்டப்பட்டு வருகிறது. இந்த அப்பார்ட்மெண்டில் நேரடியாக கராஜிலிந்து அவரவர் வீட்டிற்குச் செல்ல லிஃப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த லிஃப்ட் வசதி வீட்டு ஓனர்களுக்கு மட்டுமல்ல அவரது கார்களுக்கும் சேர்த்துத் தான். இந்த அப்பார்மெண்ட் ஹைப்பர் லக்ஸரி என்பதால் அதில் வசிப்பவர்கள் சூப்பர் கார்களை வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவர்கள் வழக்கமான கராஜில் காரை நிறுத்தினால் பிரச்சனை ஏற்படும். இதனால் காரை அவர்கள் இருக்கும் வீட்டிற்கே எடுத்துச் செல்ல லிஃப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அப்பார்ட்மென்ட் தற்போது கட்டப்பட்டுதான் வருகிறது. முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. இதில் மொத்தம் 171 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த அத்தனை வீடுகளுக்கும் லிஃப்ட் மூலம் காரை கொண்டு செல்லும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பார்க்கிங்கிலிருந்து காரை வீட்டிற்குள்ளேயே கொண்டு சென்று நிறுத்திக்கொள்ள முடியும்.

வீட்டிற்குள் காரை ஒரு கண்ணாடி அறையில் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்பார்மெண்ட் பில்டிங்கில் இந்த சூப்பர் கார்களை பராமரிக்கவும் பிரத்தியேக குழு ஒன்றும் இயங்கவுள்ளது. அந்த குழு சூப்பர் கார் ஓனர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை உடனடியாக வழங்கும்.
இது மட்டுமல்ல இந்த பில்டிங்கே புகாட்டி எமனேட்ஸின் இன்ஸ்பிரேஷனில் வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பில்டிங்கை கட்டமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களும் உலகிலேயே சிறந்த பொருட்களாகத் தேர்வு செய்யப்பட்டுக் கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டிடம் எப்படி வரும் என் 3டி வடிவமைப்பு மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அப்பார்மெண்டின் விலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வெறும் கட்டமைப்பு பணிகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. இது முழுவதும் கட்டமைக்கப்பட்டு விற்பனைக்கு வர 3 ஆண்டுகள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் இந்த பில்டிங்கில் ஒரு அப்பார்மெண்டை வாங்கப் பலர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புகாட்டி போன்ற கார் ஓனர்களுக்கு இதுபோன்ற அப்பார்மெண்ட் நிச்சயம் தேவை, சூப்பர் காரை வாங்குவதற்கு ஆகும் செலவு மட்டுமே பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என யாரும் யோசிப்பதில்லை. சூப்பர் காரை வாங்குவதை விட அதை பராமரிக்கும் செலவு தான் அதிகம்.


Click it and Unblock the Notifications









