புகாட்டி பிராண்டில் வெளியிடப்பட்ட அசத்தலான அதிவேக படகுகள்!

By Saravana

சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் மிகவும் பழமையும், பாரம்பரியமும் கொண்ட நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகாட்டி. உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் காரான வேரான் மூலம் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தது. இந்தநிலையில் புகாட்டி நிறுவனத்தை ஸ்தாபகம் செய்த எட்டோர் புகாட்டி அதிவேக கார் மட்டுமின்றி, அதிவேக படகிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.

1930களிலேயே அவர் அதிவேக படகுகள் தயாரிப்பிலும் ஈடுபட்டார். இந்தநிலையில், தனது படகு தயாரிப்பு மீதான பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் விதத்தில், அதிவேக படகு மாடல்களை தயாரிக்க புகாட்டி எண்ணியது. இதற்காக, அதிவேக படகு தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான பால்மர் ஜான்சன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

பெயரின் சுவாரஸ்யம்

பெயரின் சுவாரஸ்யம்

புகாட்டி பிராண்டில் பால்மர் ஜான்சன் வடிவமைத்துள்ள அதிவேக படகுகள் புகாட்டி நைனிட்டி என்ற பிராண்டில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதாவது, நைனிட்டி என்பது எட்டோர் புகாட்டி தனது மகள் லிடியாவுக்கு வைத்திருந்த செல்லப் பெயர் என்பது பலர் அறிந்திராத விஷயம்.

டிசைன்

டிசைன்

புகாட்டி கார்களின் அரக்கத்தனம் மிகுந்த டிசைன், சிறந்த செயல்திறன் போன்றவற்றை மனதில் வைத்து இந்த படகுகளை பால்மர் ஜான்சர் நிறுவனத்தார் உருவாக்கியிருக்கின்றனர். கார்பன் ஃபைபர், டைட்டானியம் போன்ற உறுதிமிக்க இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், மர வேலைப்பாடுகளும் மனதை மயக்கும் வகையில் உள்ளது.

மாடல்கள்

மாடல்கள்

மொத்தம் மூன்று மாடல்களில் புகாட்டி நைனிட்டி அதிவேக படகுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. PJ63 நைனிட்டி மாடல் 63 அடி நீளம் கொண்டது. இந்த படகில் 4 பேர் சொகுசாக அமர்ந்து செல்ல முடியும். இதன் விலை 3.25 மில்லியன் பவுன்ட்டுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

PJ63 நைனிட்டி என்ற மாடல் தவிர்த்து, 42 அடி நீளம் கொண்ட PJ42 நைனிட்டி மற்றும் 88 அடி நீளம் கொண்ட PJ88 நைனிட்டி என்ற இரண்டு மாடல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

உற்பத்தி

உற்பத்தி

அடுத்த 12 மாதங்களில் இவற்றின் வர்த்தக ரீதியிலான தயாரிப்பு துவங்கும். அனைத்து படகுகளும் மணிக்கு அதிகபட்சமாக 72 கிமீ வேகம் வரை செல்லும். இவை அனைத்தும் கலெக்டர்ஸ் எடிசன் என்று சொல்லப்படும், பிரத்யேகமான படகுகளை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கானதாக குறிப்பிடப்படுகிறது.

Article Published On: Monday, December 7, 2015, 16:34 [IST]
English summary
Bugatti has teamed up with Palmer Johnson, the world's largest luxury yacht manufacturer to launch the Niniette series of fast luxury yachts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+