ஒரே ஆண்டில் 11 புகாட்டி கார்களை விற்ற பெண் விற்பனை பிரதிநிதி!

By Saravana
Anitha
ஒரே ஆண்டில் 11 புகாட்டி வேரோன் சூப்பர் கார்களை விற்று ஆட்டோமொபைல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார் அனிதா கிரிஸன் என்ற விற்பனை பிரதிநிதி. லண்டனில் உள்ள மேஃபேர் டீலர்ஷிப்பில்தான் இவர் பணிபுரிகிறார்.

கார்களை விற்பதில் புதிய அணுகு முறைகள், வாடிக்கையாளர்கள் திருப்தி என பல்வேறு விதத்திலும் தனது பணியை செம்மையாக செய்து வருகிறார் அனிதா கிரிஸன். அனிதா ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர்.

அனிதா கிரிஸனின் வெற்றிக்கு அவரது உழைப்புதான் மிக முக்கியமானது. உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள விவிஐபி வாடிக்கையாளர்களை இரவு பகல் பாராமல் தொடர்பு கொண்டு புகாட்டி வேரோனை விற்று வருகிறார் அந்த சிரித்த முகம் மாறாமல்.

அதுமட்டுமல்ல வாடிக்கையாளர் இல்லத்திற்கே சென்று தனது திறமையான பேச்சால் அசர வைப்பதுடன் காரியத்தையும் கச்சிதமாக முடித்துக் கொண்டு வந்துவிடுகிறார். ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இவர் கார் விற்பனையை கவனிக்கிறார். இவரது ஒப்பற்ற திறமையை வியந்து பாராட்டிய புகாட்டி தலைவர் கிறிஸ்மஸ் தினத்தன்று வாழ்த்து அட்டையை அனுப்பியிருக்கிறார்.

மணிக்கு 400 கிலோமீட்டருக்கு மேல் பறக்கும் ரூ.16 கோடி விலை கொண்ட 11 புகாட்டி வேரோன் கார்களை விற்ற அசர வைத்திருக்கும் இவரிடம் ஃபோக்ஸ்வேகன் கோல்ப் கார்தான் உள்ளதாம். அதுகுறித்து கேட்டால் எனது லைப்ஸ்டைலுக்கு இது போதும். எனது கோல்ப் காரை மிகவும் நேசிக்கிறேன் என்கிறார்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 21, 2013, 10:30 [IST]
English summary
A luxury car saleswoman has been hailed as one of the world's best after it emerged she had sold more than £13million worth of Bugatti Veyrons in a single year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+