ஷோ கேஸுக்கு பதிலாக லிவிங் ரூமில் சூப்பர் கார்.. துபாய் ஷேக்குகளையே மிரளவிட்ட இந்தியர்! ரோல்ஸ் ராய்ஸே தூசுதான்!

துபாயில் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்தியர்கள் ஒரு சிலர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவரே இந்தியாவைப் பூர்வமாகக் கொண்ட பல்விந்தர் சிங் சாஹ்னி. இவர் மிகப் பெரிய செல்வந்தராக மட்டுமல்ல மிகப் பெரிய கார் காதலராகவும் அந்த நாட்டில் அறியப்படுகின்றது.

துபாய் ஷேக்குகளுக்கே டஃப் கொடுக்கும வகையில் இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, சொ்குசு வசதிகள் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பல்விந்தர் சிங் சாஹ்னி இடத்தில் பல உள்ளன. அவை அனைத்திலும் சூப்பர் எக்ஸ்பென்சி விலைக் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Balvinder sahni luxury car

அதாவது, பல கோடி ரூபாய் விலைக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு பதிவெண்ணாக மிக மிக விலை உயர்ந்த நம்பர் பிளேட்டுகளே பொருத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இவரிடத்தில் கார்கள் மட்டுமல்ல, அவருடைய கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நம்பர் பிளேட்டுகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் காட்சியளிக்கின்றன.

இத்தகைய செயலால் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கே பல்விந்தர் சிங் சாஹ்னி டஃப் கொடுக்கும் நபராக மாறி இருக்கின்றார். இவரிடத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமல்ல சில அரிய சூப்பர் கார்களும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றிலும் மிக மிக விலைக் கொண்ட நம்பர் பிளேட்டுகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Balvinder sahni with his cars

அவருடைய கார் கலெக்ஷன் முழுவதும் மோ விளாக்ஸ் எனும் யுட்யூப் சேனலில் உள்ள வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. பல்விந்தர் சிங் சாஹ்னி துபாயில் ஆர்எஸ்ஜி குழுமம் எனும் கம்பெனியை நடத்தி வருகின்றார். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் இரண்டும் அவரே ஆவார்.

இந்த நிறுவனம் அந்நாட்டில் ஆட்டோமோட்டிவ், ரியல் எஸ்டேட் மற்றும் இன்டஸ்ட்ரீஸ்க்கான உபகரணங்களைத் தயாரித்து தருவது உள்ளிட்ட தொழில்பிரிவுகளில் ஈடுபட்டு வருகின்றது. இத்தகைய மிகப் பெரிய பிசினஸ் மேனே தற்போது மிகப் பெரிய சொகுசு கார் விரும்பியாக இருக்கின்றார். மூன்றுக்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன.

Balvinder sahni with no 5 number plate

இரண்டு கல்லினன்கள் மற்றும் பேந்தம் VIII செடான் வகை கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த காரின் ஒவ்வொன்றின் விலையும் ரூ. 5 கோடி முதல் 6 கோடி வரை ஆகும். ஆனால், இந்த கார்கள் ஒவ்வொன்றிலும் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொடங்கி 17 மல்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் மதிப்புக் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 60 கோடி முதல் 84 கோடி வரை மதிப்புக் கொண்ட நம்பர் பிளேட்டுகளை அவர் தன்னுடைய கார்களஇல் பயன்படுத்தி வருகின்றார். இதை வைத்து பார்க்கையில் பல்விந்தர் சிங் சாஹ்னி தான் வைத்திருக்கும் கார்களில் அதன் விலையைக் காட்டிலும் அதிக மதிப்புக் கொண்ட நம்பர் பிளேட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிகின்றது.

Balvinder sahni super car

Source: LuxuryLaunches 1 மற்றும் 27 எனும் நம்பர் பிளேட்டுகளையே இவர் அதிகம் பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக இவர் சமீபத்தில் வாங்கிய டி5 எனும் பதிவெண் மிக மிக விலை உயரியதாகக் காட்சியளிக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த நம்பர் பிளேட்டை அவர் வாங்கி இருக்கின்றார்.

இந்த பதிவெண்ணை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் மதிப்பே வெறும் 10 கோடிதான். ஆனால், இந்த நம்பர் பிளேட்டோ ரூ. 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 142 கோடி ஆகும்.

பல்விந்தர் சிங் சாஹ்னி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் மட்டுமல்ல இன்னும் பல கார்களில் அவர் ஒற்றை இலக்க எண்ணைக் கொண்ட பதிவெண்ணையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அவர் வீடியோவில் ஓர் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 காரை காட்சிப்படுத்தினார். அந்த காரிலும் அவர் ஒற்றை இலக்க பதிவெண்ணையே பயன்படுத்தி இருக்கின்றார்.

இதுதவிர, தன்னுடைய அரண்மனை போன்ற பிரமாண்ட வீடு, அந்த வீட்டில் உள்ள நவீன அம்சங்கள் மற்றும் வசதிகள் பலவற்றையும் அவர் காட்சிப்படுத்தினார். இதை வைத்து பார்க்கையில், உண்மையில் உலகின் முன்னணி செல்வந்தர்களுக்கு டஃப் கொடுக்கும் வதையில் மிக ஆடம்பரமான வாழ்க்கையை பல்விந்தர் சிங் சாங்னி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

இவர் தன்னுடைய லிங் ரூமை அலங்கரிக்கும் விதமாக குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட புகாட்டி சிரோன் (limited-edition Bugatti Chiron) காரை அங்கு நிறுத்தி வைத்திருக்கின்றார். இந்த கார் எப்போதும் ஷோ கேஸ் போல அங்கேயே நிற்குமாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த காரில் பதிவெண் கூட பொருத்தவில்லை.

நாம் நம் வீடுகளில் பொம்மையையும், பூச்செடிகளையும் அழகிற்காக நிறுத்தி வைப்பதைபோல இவர் காரை நிறுத்தி வைத்திருக்கின்றார். இந்த லிமிடெட் எடிசன் புகாட்டி சிரோன் காரின் ஒன்றின் இந்திய மதிப்பு மட்டும் 19கோடி ரூபாய் முதல் 28கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இத்தகைய மிக மிக மிக அதிக விலைக் கொண்ட காரையே சும்மா ஷோவிற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்விந்தர் சிங் சாஹ்னி துபாயில் பயன்படுத்தி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் இவ்ளோ அதிக விலையைக் கொண்டது மட்டுமல்ல பல்வேறு சிற்பபுகளைத் தாங்கியதாகவும் அது காட்சியளிக்கின்றது. அந்த கார் மணிக்கு 440கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. வெறும் 42 செகண்டுகளிலேயே இந்த உச்சபட்ச வேகத்தை புகாட்டி சிரோன் எட்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, November 13, 2023, 9:59 [IST]
English summary
Bugatti supercar adorns the living room of an indian living in dubai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X