தனிநபர் விமானத்திற்கு இணையான புகாட்டி வேரான் காரின் பராமரிப்பு செலவு!!

By Saravana

கார் வாங்குவதைவிட, அதன் பராமரிப்பு செலவீனங்களுக்கு பயந்து பலர், கார் வாங்கும் திட்டத்தையே தள்ளி போடுவதுண்டு. காரின் மாதத் தவணை தவிர்த்து, இதர சர்வீஸ் கட்டணங்கள் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் என்று இதர செலவுகளால் பலரின் பட்ஜெட் தடுமாறிவிடுவதுண்டு.

ஆனால், சூப்பர் கார்களின் விலையும், பராமரிப்பு செலவும் பெரும் பணக்காரர்களுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. அவர்களின் அந்தஸ்தையும், ஆசையையும் நிறைவேற்றும் சிறப்பம்சங்களை மட்டுமே முக்கியமானதாக கருதுகின்றனர்.

அந்த வகையில், உலகின் மிக விலையுயர்ந்த அதிவேக கார் மாடல்களில் ஒன்றான புகாட்டி வேரான் சூப்பர் காரின் பராமரிப்பு செலவீனங்கள் பெரும் பணக்காரர்களையே திகைக்க வைப்பதாக இருக்கிறது. சாம்பிளுக்காக சில பாரமரிப்பு செலவீனங்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சொகுசு கார் வரி

சொகுசு கார் வரி

புகாட்டி வேரான் காரின் விலையைவிட பல நாடுகளின் போக்குவரத்து பதிவு அலுவலங்களில், அதற்கு விதிக்கப்படும் பதிவு மற்றும் சாலை வரி மிக மிக அதிகம். உதாரணத்திற்கு, அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் புகாட்டி வேரான் காருக்கு 3.20 லட்சம் டாலர்கள் வரியாக விதிக்கப்படுகிறது.

ஆயில் மாற்ற...

ஆயில் மாற்ற...

அதிசக்திவாய்ந்த புகாட்டி வேரான் காரின் 1,000 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சினை குளிர்விப்பதற்கான விசேஷ ஆயில் பயன்படுத்தப்படுகிறது. ஒருமுறை ஆயில் மாற்றுவதற்கு மட்டும், 21,000 டாலர்கள் செலவிட வேண்டியிருக்கும்.

டயர் தேய்மானம்...

டயர் தேய்மானம்...

மணிக்கு 400 கிமீ வேகம் வரை எட்ட வல்ல இந்த காரில் டயர்களின் தேய்மானம் அதிகமிருக்கும். புகாட்டி வேரான் காரில் மிச்செலின் பைலட் ஸ்போர்ட் 2எஸ் என்ற விசேஷ டயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 2,500 கிமீ முதல் 4,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை டயர்களை மாற்ற புகாட்டி பரிந்துரைக்கிறது.

டயர் விலை

டயர் விலை

ஒரு செட் டயர்களை மாற்றுதவதற்கு 30,000 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சக்கரங்கள்

சக்கரங்கள்

ரிம் மற்றும் டயர் என இரண்டையும் சேர்த்து ஒரு செட் மாற்றுவதற்கான கட்டணம் 1.20 லட்சம் டாலர்கள் மட்டுமே!

இன்ஸ்யூரன்ஸ்

இன்ஸ்யூரன்ஸ்

ஆண்டுக்கு 30,000 டாலர்கள் இன்ஸ்யூரன்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் செலவு

பெட்ரோல் செலவு

இந்த காரில் 99 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒருமுறை முழுவதுமாக எரிபொருள் நிரப்புவதற்கு 140 டாலர்கள் செலவாகும். 100 கிமீ தூரம் செல்வதற்கு 78 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

ஆண்டுக்கான பராமரிப்பு செலவு

ஆண்டுக்கான பராமரிப்பு செலவு

புகாட்டி காருக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்பு என ஆண்டுக்கு 3 லட்சம் டாலர்கள் வரை புகாட்டி வேரான் உரிமையாளர்கள் செலவிட வேண்டியிருக்கிறதாம்.

டெலிவிரி கட்டணம்

டெலிவிரி கட்டணம்

பிரான்ஸில் உள்ள ஆலையில் இருந்து, உரிமையாளரின் வீட்டிற்கு வந்து பாதுகாப்பாக காரை டெலிவிரி கொடுக்க தனி கட்டணம். உதாரணமாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமையாளர் டெலிவிரி எடுப்பதற்கு தனியாக 40,000 டாலர்களை கொடுக்க வேண்டியிருக்கும்.

சர்வீஸ் பேக்கேஜ்

சர்வீஸ் பேக்கேஜ்

இவற்றை தனித்தனியாக செய்வதற்கு பதிலாக சிறப்பு பராமரிப்பு திட்டம் ஒன்றை வேரான் சூப்பர் காருக்கு புகாட்டி வழங்குகிறது. அதன்படி, மூன்றாண்டுகளுக்கு 50,000 யூரோவை செலுத்திவிட்டால், மூன்று ஆண்டுகளுக்கான அனைத்து பராமரிப்பையும் புகாட்டி நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது.

விமானத்தை பயன்படுத்தலாம்...

விமானத்தை பயன்படுத்தலாம்...

இந்த காரை வாங்கி வைத்து பராமரிப்பற்கு பதில் ஒரு தனிநபர் பயன்பாட்டு விமானத்தையே வைத்துக் கொள்ளலாம் என்று சிலர் கூறுவதுண்டு. அந்தளவு பராமரிப்பு செலவீனத்தை கொண்டிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட 450 கார்களும் விற்று தீர்ந்துவிட்டன. மேலும், இங்கே சாதாரண பராமரிப்பு கட்டண விபரத்தையே பார்த்தோம். பழமையாகும்போது, இந்த பராமரிப்பு கட்டணம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.

சுவாரஸ்யங்கள்

01. புகாட்டி வேரான் கார் பற்றிய சுவாரஸ்யங்கள்...

02. புதிய புகாட்டி சிரான் கார் பற்றிய தகவல்கள்...

03. முதல் புகாட்டி வேரான் கார் ஏலம்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்...

More from DriveSpark

Article Published On: Monday, October 26, 2015, 10:37 [IST]
English summary
Bugatti Veyron Maintenance Cost So Expensive.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+