அவரோட காருக்கு ஒரு டைம் ஆயில் மாத்தவே இவ்ளோ செலவு ஆகுதா! விஷயத்தை கேள்விபட்டதும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

பிரான்ஸை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று புகாட்டி (Bugatti). இந்த நிறுவனத்தின் கார்களை வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் புகாட்டி கார்கள் மிகவும் விலை (Price) உயர்ந்தவை. வாங்குவதுடன் மட்டுமல்லாது, புகாட்டி கார்களை பராமரிப்பதும் கூட கடினமானதுதான்.

உதாரணத்திற்கு புகாட்டி வேரோன் (Bugatti Veyron) காரை எடுத்து கொள்ளலாம். இந்த காருக்கு ஒரு முறை ஆயில் மாற்றுவதற்கு ஆகும் செலவு, நம்மில் பலர் வைத்திருக்கும் கார்களின் விலையை விட அதிகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான்.

Car Oil Change

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரும், கார் சேகரிப்பாளருமான மேனி கோஷ்பின் என்பவர் 3 புகாட்டி கார்களை வைத்துள்ளார். இதில் ஒரு புகாட்டி வேரோன் காரை பராமரிப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல்கள் நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்துபவையாக உள்ளன.

வேரோன் காருக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் மாற்ற வேண்டும் என புகாட்டி நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாக மேனி கோஷ்பின் கூறுகிறார். இதற்கு மட்டும் அவருக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவு ஆகிறதாம். இந்திய மதிப்பில் இது தோராயமாக 20 லட்ச ரூபாய் ஆகும்!

Bugatti Veyron

புகாட்டி வேரோன் காருக்கு ஆயில் மாற்ற ஏன் இவ்வளவு செலவு ஆகிறது? என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம். ஒரு வழக்கமான கார் ஒரே ஒரு ட்ரெய்னேஜ் ப்ளக்கை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் புகாட்டி வேரோன் காரில், 16 ட்ரெய்னேஜ் ப்ளக்குகள் இருக்கும்.

எனவே அதனை கையாள்வது சிரமமான காரியம். புகாட்டி டெக்னீசியன் இந்த வேலையை செய்து முடிப்பதற்கு அதிகமாக மெனக்கெட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே ஆயில் மாற்ற அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இந்த செய்தி இத்துடன் முடியப்போவதில்லை. ஏனென்றால், புகாட்டி வேரோன் காருக்கு டயர் மாற்ற எவ்வளவு செலவு ஆகும்? என்பதை அடுத்து பார்க்க போகிறோம்.

புகாட்டி நிறுவனம் வேரோன் காரின் டயர்களை ஒரு சில ஆண்டுகள் இடைவெளியில் மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்கிறதாம். ஆனால் ஒரு முறை டயர்களை மாற்றினால், 38 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்திய மதிப்பில் இது சுமார் 31 லட்ச ரூபாய் ஆகும்!

டயர்களை விட, புகாட்டி வேரோன் காரின் ரிம்களை மாற்றுவதற்கு இன்னும் அதிக செலவு ஆகிறதாம். வேரோன் காரின் ரிம்களை சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என புகாட்டி நிறுவனம் பரிந்துரை செய்கிறதாம். இதனை ஒரு முறை செய்வதற்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவு ஆகுமாம்.

இந்திய மதிப்பில் இது சுமார் 40 லட்ச ரூபாய் ஆகும்! எனவே புகாட்டி வேரோன் காரை நீங்கள் ஒரு சில ஆண்டுகள் வைத்திருந்தால் கூட, பராமரிப்பிற்காக 91 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கும். இது நாங்கள் இங்கே கூறியுள்ள விஷயங்களுக்கான செலவு மட்டுமே. மற்ற செலவுகளையும் சேர்த்தால், பராமரிப்பிற்காக நீங்கள் சுமார் 1 கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு பணம் இருந்தால், ஒரு வீட்டை கட்டி விட்டு, மீதி பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து விட்டு, வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் பண வசதி படைத்த கார் ஆர்வலர்கள் அப்படி அல்ல. அவர்கள் எண்ணங்கள் வேறு என்பதால், இதைக்காட்டிலும் அதிக தொகையை செலவு செய்வதற்கு கூட அவர்கள் தயாராக இருப்பார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 13:18 [IST]
English summary
Bugatti veyron maintenance cost rs 1 crore for oil tyre rim change
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+