சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

சொகுசு கார்களின் விலைக்கே டஃப் கொடுக்கின்ற மதிப்பில் ஓர் வாட்ச் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

உலக புகழ்வாய்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களில் புகாட்டி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், சூப்பர் கார் தயாரிப்பதில் தலை சிறந்த நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

குறிப்பாக, இந்நிறுவனத்தின் கார்கள் சாலையில் செல்லும்போது பிறரின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை. குறிப்பாக, சக வாகன ஓட்டிகள் மற்றும் சாலைவாசிகள் என அனைவரையும் ஒரு முறையாவது திரும்பி பார்க்க செய்துவிடும். அந்தளவிற்கு கவர்ச்சி மிகுந்த கார்களாக அவை இருக்கின்றன. கவர்ச்சி மட்டுமின்றி புகார் கார் சாலையில் ஊர்ந்து செல்லும்போது வெளிவரும் சத்தம்கூட இசையைப் போன்றதாக இருக்கின்றது. இதனை ஒலிக்கச் செய்வதற்காக சிலர் புகாட்டி கார்களை சாலையில் இயக்குவது உண்டு.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இதுபோன்ற பல காரணங்களினாலயே இந்நிறுவனத்தின் கார்கள் பெரும்பாலும் பல கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், இப்போது மாறியிருக்கின்றது. அதாவது, இந்நிறுவனத்தின் மூலம் முதல்முறையாக விலைக் குறைந்த தயாரிப்பு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதுதான் புகாட்டி நிறுவனத்தின் புத்தம் புதிய கை கடிகாரம்.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இந்நிறுவனத்தின் கார்கள் பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் விற்பனைச் செய்யப்பட்டு வரும்நிலையில், புதிய கை கடிகாரம் 280.000 என்ற அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுதான் உங்க ஊருல குறைந்த விலையா என கேட்கத் தோன்றலாம்.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இந்தியாவில் ஒரு அமெரிக்கா டாலருக்கு 60 ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு நிலவுவது உங்களுக்கு தெரியாதா என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 2.13 கோடி ஆகும் அந்த வாட்சின் விலை. ஆனால், அந்நிறுவனத்தின்மூலம் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களைக் காட்டிலும் இது சற்றே குறைந்த விலை என்பதைதான் நாங்கள் இங்கு கூறியிருக்கின்றோம்.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

எதனால், இந்த கடிகாரத்திற்கு இத்தகைய விலை என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். இந்த கை கடிகாரத்தில் கார்களுக்கு பயன்படுத்துவதைப் போன்ற எஞ்ஜின் அமைப்புடைய மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுவே, இந்த கை கடிகாரத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இதற்காக 578 சிறிய சிறிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், சஃபையர் கற்கள், காரின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

ஆனால், இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி வெறும் 60 மணி நேரங்கள் மட்டுமே நீடித்து உழைக்கும். இதன்பின் செல்போனை சார்ஜ் செய்வதுபோல் சார்ஜேற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய சார்ஜ் விரைய தன்மைக்கு கடிகாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பியூசன் ரகத்திலான மோட்டாரே காரணமாக உள்ளது.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த சூப்பர் கடிகாரம் எப்படி இயங்கும், எம்மாதிரியான வசதிகளை எல்லாம் வழங்கும் என்பதுகுறித்த தகவலை புகாட்டி நிறுவனம் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவை ஜேகப்&கோ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். இந்நிறுவனத்துடன் இணைந்தே புகாட்டி இந்த வ்ரிஸ்ட் வாட்சை உருவாக்கியிருக்கின்றது.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

உலகிலேயே அதீத விலையைக் கொண்டு விற்பனைக்கு வரும் வாட்சாக இது உள்ளது. புகாட்டி சிரோன் காருக்கு அடுத்தபடியாக விற்பனைக்கு புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்யும் சிறந்த தயாரிப்பாக இது உள்ளது.

சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த வாட்சிற்கு முன்பாக ஜேகப் அண்ட் கோ நிறுவனம் ஏற்கனவே இரு அதிக விலைக் கொண்ட வாட்ச்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. அவை, ட்வின் டர்போ ப்யூரியஸ் மற்றும் எபிக் எக்ஸ் க்ரோனா மாடல்கள் ஆகும்.

பலரின் மனதில் இந்த வாட்சை வாங்குவதற்கு பதிலாக பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனத்தின் சொகுசு காரையே வாங்கிடலாம் என்று தோன்றலாம். எங்கேங்க அந்த புகாட்டி நிறுவனத்துக்கு இது தெரியுது...

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bugatti Wrist Watch With W16 Engine. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X