ரோட்ல திடீர்னு இப்படி எல்லாம் கூட நடக்குமா! வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைத்த பகீர் சம்பவம்!
இந்திய சாலைகளில் எப்போது எது நடக்கும் என கணிக்கவே முடியாது. உங்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென வேறு ஒரு வாகனம் வரலாம். அல்லது கால்நடைகள் ஏதாவது குறுக்கே பாயலாம். அல்லது ஏதேனும் ஒரு பொருள் பறந்து வந்து உங்களை தாக்கலாம். எனவே வாகனங்களை ஓட்டும்போது மிகவும் முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முடியும். கொஞ்சம் அசந்தால் கூட, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஏனெனில் இந்திய சாலைகள் உண்மையிலேயே மிகவும் அபாயகரமானவை. இது உண்மை என்பதை நிரூபிக்கும் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பெண் ஒருவர் மாடு ஒன்றை அழைத்து சென்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் ஒருவர் வந்துள்ளார்.

அவரை மாடு திடீரென தாக்கியது. இதனால் நிலை குலைந்து போன அந்த நபர், சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக லாரி ஒன்று வந்தது. அதன் சக்கரங்களுக்கு அருகே, ஸ்கூட்டரில் வந்த நபர் விழுந்தார். ஆனால் நல்ல வேளையாக லாரியின் டிரைவர் பிரேக் பிடித்த காரணத்தால், அவரது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை இந்த வீடியோ தெளிவாக எடுத்து காட்டுகிறது. உண்மையில் மாடு தன்னை தாக்கும் என்பதை ஸ்கூட்டரில் வந்த நபர் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த மாடு திடீரென அவரை ஏன் தாக்கியது? என்பது தெளிவாக தெரியவில்லை.

ஒரு சில சமயங்களில் பயங்கரமான சத்தம் கேட்டாலோ அல்லது நாய்கள் குரைத்தாலோ மாடுகள் மிரண்டு விடும். ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ஒரிஜினல் ஆடியோ இல்லை. எனவே பயங்கரமான சத்தம் கேட்ட காரணத்தால் மாடு மிரண்டதா? என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.
இந்த விஷயத்தில் உண்மையில் லாரி டிரைவரை பாராட்டியே ஆக வேண்டும். ஸ்கூட்டரில் வந்த நபர் கீழே விழுந்தது தெரிந்த உடனேயே, அவர் சரியான நேரத்தில் பிரேக் பிடித்து விட்டார். நல்ல வேளையாக இந்த விபத்தில் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் இன்றி ஸ்கூட்டரில் வந்த நபர் உயிர் பிழைத்து விட்டார்.
மாடு தாக்கியதால் கீழே விழுந்த உடனேயே அவர் எழுந்திருப்பதை வீடியோவில் நம்மால் காண முடிகிறது. ஒரு வேளை லாரி டிரைவர் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காமல் போயிருந்தால், இதன் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது நல்ல விஷயம்தான்.
ஆனால் ஸ்கூட்டரில் வந்த நபர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததை நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்திய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஏனெனில் இங்கு எப்போது என்ன நடக்கும்? என்பதை கணிக்கவே முடியாது.
இது போன்ற இக்கட்டான சமயங்களில் ஹெல்மெட் அணிந்திருந்தால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்து கொள்வது நல்லது. இதற்கிடையே இரு சக்கர வாகன ஓட்டியை மாடு தாக்கிய சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது சரியாக தெரியவில்லை.
அதேபோல் இது கடந்த 2024ம் ஆண்டு நடந்த சம்பவம் ஆகும். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகள் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த செய்தியை வழங்கியுள்ளோம்.


Click it and Unblock the Notifications








