ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக இசை கலைஞர்கள் குழு ஒன்று புல்லாங்குழல் இசையுடன் ராயல் எண்ட்பீல்டின் எக்ஸாஸ்ட் சத்தத்தை இணைத்து புதுமையான இசையை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்த நாட்டில் பல உயிர்களை காவு வாங்கியதுடன் பல நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்த வைரஸினால் பலத்த உயிர்சேதங்களை சந்தித்துள்ளன.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் சற்று குறைவாக தான் இருந்தாலும் இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தாவாறே உள்ளது. இதன் காரணமாக நேற்றுடன் (மே 3) முடியவிருந்த ஊரடங்கு கூடுதலாக இரு வாரங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

இதனால் மக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பண பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனை சரிப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் தான் உள்ளது.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பச்சை பிரிவில் உள்ளவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் தொழில்களை மீண்டும் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்துடன் புல்லாங்குழலின் சத்தத்தை சேர்த்து இசை கலைஞர் ஒருவர் இசை ஒன்றினை உருவாக்கி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘புல்லட் ஃப்ளூட்' என்ற பெயரில் இணையத்தில் உலாவி வரும் இந்த வீடியோவை ராயல் எண்ட்பீல்டு நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த இசை பாடலிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

ராயல் எண்ட்பீல்டு பைக் மாடகளின் எக்ஸாஸ்ட் சத்தம் மற்ற அனைத்து பைக்குகளை காட்டிலும் வித்தியாசமாகவும் சற்று கூடுதல் கம்பீரத்துடன் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதனால் தான் அதன் சத்தம் தற்போது புதுமையான விஷயத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

ஆனால் இந்தியாவில் தண்டர்பேர்டு 350 மாடலின் விற்பனையை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்கனவே நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக சற்று குறைவான எடையில் மீட்டியோர் 350 மாடல் புதியதாக கொண்டுவரப்படவுள்ளது. இந்த புதிய ராயல் எண்ட்பீல்டு பைக் குறித்த முழு தகவலினை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ராயல் எண்ட்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை... அசத்தி காட்டிய வாலிபர்..!

ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தில் இசை போன்று மற்ற கலைஞர்களும் தங்களது திறன்கள் மூலமாக மக்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களை பாராட்டும் விதமாக இந்தியா முழுவதும் நேற்று கொரோனா வார்டு உள்ள அனைத்து மருத்துவமனைகள் மீதும் ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Bullet Flute” Music Made with Royal Enfield Exhaust Sound
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X