அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!
புல்லட் இரயில்கள் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இதுகுறித்த புதிய அப்டேட்டை மத்திய இரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படி என்ன அவர் கூறினார்? இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
போக்குவரத்தை பலப்படுத்துவது மற்றும் விரைவுப்படுத்துவது மூலமாகவே எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள நம் மத்திய அரசு கடந்த பல வருடங்களாகவே இந்தியாவின் போக்குவரத்து உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, நாடு முழுவதும் விரைவுச்சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டன.

அதேபோல், வந்தே பாரத் இரயில்கள் மூலமாக இரயில் பயணங்களை விரைவுப்படுத்தும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் வேகமாக இயங்கக்கூடிய புல்லட் இரயில் சேவையை கொண்டுவரும் பணிகளிலும் இந்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. முதலாவதாக, மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் அகமதாபாத்துக்கு இடையே புல்லட் இரயில் சேவை கொண்டுவரப்படுகிறது
இந்தியாவின் இந்த இரு முக்கிய மாநகரங்களுக்கு இடையே புல்லட் இரயில்கள் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. வெள்ளை நிறத்தில் கோடு கிழித்தது போன்று, ஒரே நேர்கோட்டில் பல கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்ட புல்லட் இரயில் தண்டவாளம் குறித்த புகைப்படம் ஒன்று கடந்த மாதத்தில் வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் புல்லட் இரயில் திட்டம் நல்லப்படியாக சென்று கொண்டிருப்பதாகவும், மும்பை - அகமதாபாத் இடையேயான முதற்கட்ட தண்டவாளம் அமைக்கும் பணிகள் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க உதவும் என சமீபத்திய பேட்டியில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "புல்லட் இரயில் திட்டத்தை பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்திய இரயில்வே மேற்கொண்டுவரும் முதல் புல்லட் இரயில் வழித்தடத்தில், மும்பை, தானே, வாபி, பரோடா, சூரத், ஆனந்த் மற்றும் அகமதாபாத் நகரங்களின் பொருளாதாரங்கள் அனைத்தும் ஒரே பொருளாதாரமாக மாறும்.

எனவே நீங்கள் சூரத்தில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு, மும்பைக்கு சென்று உங்கள் வேலையை முடித்துவிட்டு, இரவில் உங்கள் குடும்பத்துடன் திரும்பி வரலாம்" என தெரிவித்துள்ளார். விமான டிக்கெட்டை காட்டிலும் புல்லட் இரயில் கட்டணம் குறைவாக இருக்குமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "புல்லட் ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள பெரும்பாலான நாடுகளில், மொத்த போக்குவரத்தில் 90%-ஐ எடுத்துக் கொண்டுள்ளன" என்றார்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் இரயில் பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகின்றன. இந்த புல்லட் இரயில் வழித்தடத்தில் மொத்தம் 8 ஆறுகள் குறுக்கிடுகின்றன. அவற்றிற்கு மேலே மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் கூறுவதை போல், நிறைய நாடுகளில் புல்லட் இரயில்கள் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, பெரிய பரப்பளப்பை கொண்ட நம் இந்தியா போன்ற நாடுகளுக்கு புல்லட் இரயில்கள் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கும். புல்லட் இரயில்களினால் விமான போக்குவரத்தில் சிறிய தொய்வு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications









