ஜப்பானே வியந்து பாக்குது! இந்தியாவில் புல்லட் ரயில் இவ்வளவு சீக்கிரமே ஓடப்போகுதா?
இந்தியாவில் புல்லட் ரயில்கள் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இவர் வரும் 2027 ஆண்டு குறிப்பிட்ட பகுதியில் புல்லட் ரயில் செயல்பாடு துவங்கிவிடும் என தெரிவித்துள்ளார். முழுமையான செயல்பாடு வரும் 2029ம் ஆண்டு துவங்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகில் மிக வேகமாக பயணிக்கும் ரயில் என்றால் அது புல்லட் ரயில் தான். இது ஜப்பானில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஜப்பான் அரசு துணையுடன் இந்தியாவில் புல்லட் ரயிலை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி மும்பை- ஆமதாபாத் வரை புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த புல்லட் ரயில் பணிகள் குறித்து தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி சூரத் முதலங் பிலிமோரா வரையிலான முதல் செக்ஷன் பணிகள் மிக விரைவாக நடந்து வருவதாக தெிரவித்துள்ளார். இதற்காக அமைக்கப்படும் ரயில் பாதையில் பல புதிய தொழிற்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தொழிற்நுட்பங்கள் புல்லட் ரயிலுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தொழிற்நுட்பங்கள் இந்தியாவில் உள்ள மற்ற திட்டங்களுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரவித்துள்ளார். இந்த ரயிலுக்காக அமைக்கப்படும் ஸ்டேஷன்களும் சிறப்பாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக சூரத் பிரத்தியேக ஸ்டேஷனாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் 4 டிராக்குகள் மற்றும் 2 பிளாட்ஃபார்ம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 டிராக்குகள் ரயிலை நிறுத்தி வைக்க பயன்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு பிளாட்ஃபார்ம் மும்பையை நோக்கி செல்வதற்காகவும் மற்றொரு பிளாட்ஃபார்ம் ஆமதாபாத்தை நோக்கி செல்லும் ரயிலுக்காகவும் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த ரயிலுக்காக அமைக்கப்பட்டுள்ள டிராக்குகள் தனித்துவமான வடிவமைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த டிராக்கில் ரயில் 320,330,340 கி.மீ வேகத்தில் பயணிக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக சோதனையும் செய்யப்படவுள்ளது. இதனால் ஒரு சிறிய இடைவெளி கூட இல்லாமல் பாதைகள் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சூரத் முதல் பில்மோரா வரை உள்ள ரயில் பாதை வரும் 2027ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் வகையில் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த ரயில்வே ஸ்டேஷன்கள் மக்கள் வசதியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளா். முக்கியமாக வயது முதியவர்கள், மாற்று திறனாளிகள், குடும்பங்கள், குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் பல்வேறு தளங்களுக்கு செல்ல லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகள் செய்யப்ப்டடுள்ளது. இது போக தெளிவாக புரியும்படி அறிவிப்பு பலகைகள், தகவல் பலகைகள், அறிவிப்புகள், எல்லாம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேஷன் அதிக காற்றோற்றம் வரும் வகையிலும், இயற்கையான வெளிச்சத்தை வைத்தே ஸ்டேஷவனிற்கு தேவையான வெளிச்சத்தை பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்ப்டடுள்ளன.
இது போக காத்திருப்பு அறைகள், கழிவறைகள், ஓய்வறைகள், கடைகள் உள்ளிட்ட அமைப்புகளையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்டேஷன்களுக்கு வந்து செல்ல கனெக்டிவிட்டியை சிறப்பாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. முக்கியமாக பஸ், டாக்ஸி மெட்ரோ உள்ளிட போக்குவரத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளது.
மேலும் இந்த ஸ்டேஷன்களில் மழை நீர் சேகரிப்பு, குறைவான கழிவு வெளியேற்றம், சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத பெயிண்ட்கள், இனிமையான சூழ்நிலை ஆகியவை இருக்கும்படி வடிவைமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரத் நகரம் வைர வியாபாரத்திற்கு பிரபலமானது என்பதால் அதை பிரதிபலிக்கம் வகையில் இந்த ஸ்டேஷனின் உட்புற வடிவமைப்பு இருக்கும் என தெரவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்டேஷனின்அடிப்படை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. உட்கட்டமைப்பு,மற்றும் வசதிகளுக்கான கட்டமைப்பு பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது.
மும்பை ஆமதாபாத் இடையே சுமார் 508 கி.மீ தூரம் இருக்கிறது. இதில் 7 நதிகளை கடக்கும் பாலங்கள், 5 கான்கிரீன் பாலங்கள், 9 ஸ்டீல் பாலங்கள் கட்டமைக்கும் பணிகள் நடந்துள்ளது. இதில் ரயில் போகும் போது சத்தம் வருவதை குறைக்க 4 லட்சம் சத்தம் குறைக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 210 கி.மீ தூரத்திற்கு டிராக் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்து்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் கனவு திட்டமாக புல்லட் ரயில் திட்டம் தான் இருக்கிறது.தற்போது புல்லட் ரயில்கள் ஜப்பான் மூலம் வாங்கப்பட்டாலும் விரைவில் இதை இந்தியாவில் தயாரித்து மற்ற நகரங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது செயல்பாட்டிற்கு வந்தால் நிச்சயம் உலகளவில் இந்தியாவின் தரம் உயரும்.


Click it and Unblock the Notifications








