புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு, மகாராஷ்டிர பழங்குடி கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

By Arun

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு, மகாராஷ்டிர பழங்குடி கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சில பகுதிகளில் மக்கள் கிளர்ச்சி உருவாகியுள்ளதால், மத்திய அரசு கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

மோடியின் கனவு திட்டம்

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் கனவு என வர்ணிக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் பட்ஜெட் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

இந்த அதிவேக புல்லட் ரயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். இதன்மூலமாக மும்பை-அகமதாபாத் இடையேயான 508 கிலோ மீட்டர் தொலைவை, வெறும் இரண்டே மணி நேரத்தில், புல்லட் ரயில் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்திற்கு மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டினர். ஜப்பானின் உதவியுடன்தான், தனது கனவு திட்டத்தை நிறைவேற்ற மோடி திட்டமிட்டுள்ளார்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

யார் கண் பட்டதோ?

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஆரம்பம் முதலே புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்புதான் கிளம்பி வருகிறது. முதலில் ஓட்டை உடைசல்களாக உள்ள பழைய ரயில்களை எல்லாம் சரி செய்து விட்டு, புல்லட் ரயில் திட்டத்தை பற்றி யோசிக்கலாம் என மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் அறிவுரை கூறின.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

எனினும் 2022ம் ஆண்டிற்குள் பணிகளை முடித்து விட்டு புல்லட் ரயிலை ஓட்டியே ஆக வேண்டும் என மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றி வருகிறது. அந்த ஆண்டின் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினமாகும். அன்றைய தினத்தில், புல்லட் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

கொந்தளிக்கும் பழங்குடி மக்கள்

ஆனால் மோடியின் கனவு திட்டத்திற்கு தற்போது மீண்டும் பெரிய அளவிலான சிக்கல் எழுந்துள்ளது. இம்முறை எதிர்கட்சிகள் வடிவில் தடை வரவில்லை. நேரடியாக மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 1,400 ஹெக்டேர் நிலத்தை, புல்லட் ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்கார் மாவட்டம் வழியாக மட்டும் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்க வேண்டியுள்ளது. ஆனால் பல்கார் மாவட்டத்தில் உள்ள 73 பழங்குடி கிராமங்களை சேர்ந்த மக்கள், புல்லட் ரயில் திட்டத்திற்கு தங்கள் நிலத்தை தர முடியாது என அறிவித்துள்ளனர்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

இந்த நிலங்களை எல்லாம் இந்த ஆண்டு இறுதிக்குள் கையகப்படுத்தியே ஆக வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு உள்ளது. எனவே மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பழங்குடி கிராம மக்கள் மத்தியில் கிளர்ச்சி எழுந்துள்ளது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

ஆனால் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் வேறு விதமாக கூறுகின்றனர். கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு 5 மடங்கு அதிக இழப்பீட்டை வழங்குவதாக கூறி, பழங்குடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

அதாவது பல்கார் மாவட்டத்தில் உள்ள 200 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதில்தான் பிரச்னையாம். அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் பழங்குடிகள் என்பதால், அரசின் நவீன திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

இதுதவிர தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்றாலும் கூட, இந்த விவகாரத்தில் உள்ளூர் அரசியல் தலையீடும் இருப்பதாக அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட 73 கிராமங்களில், 50 கிராம மக்களை சமாதானப்படுத்தி விட முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

எஞ்சிய 23 கிராமங்களில்தான், புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலங்களை வழங்குவதில், உச்சகட்ட எதிர்ப்பு நிலவுகிறது. ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவே அவர்கள் தயாராக இல்லையாம். சர்வே பணிக்கு சென்ற அதிகாரிகளை கூட அவர்கள் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

என்ன செய்ய போகிறார் மோடி?

ஏற்கனவே தமிழகத்தில், மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எழுந்து, பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மோடியின் கனவு திட்டத்திற்கு எதிராகவும் கிளர்ச்சி எழுந்துள்ளதால், மத்திய பாஜக அரசு இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

எனவே புல்லட் ரயில் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு என்ன விதமான நடவடிக்கையை எடுக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசு ஒருவேளை தோல்வியடைந்தால், மோடியின் கனவு திட்டம் வெறும் கனவாகவே மாறிவிடும் அபாயமும் உள்ளது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

அள்ளி கொடுக்கும் ஜப்பான்

இதனிடையே இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்திற்கு, புல்லட் ரயிலுக்கு பெயர் பெற்ற ஜப்பான்தான் அதிகம் உதவி செய்து வருகிறது. திட்டத்தின் மொத்த பட்ஜெட்டான 1 லட்சம் கோடி ரூபாயில், 88 ஆயிரம் கோடி ரூபாயை, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி கடனாக வழங்குகிறது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

அதாவது 50 ஆண்டுகளுக்கு, 0.1 சதவீதம் என்ற வருடாந்திர வட்டி விகிதத்தில் இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த நிதி எல்லாம் மத்திய அரசின் கைகளுக்கு வர தொடங்கி விட்டன. ஆனால் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில்தான் சிக்கல் எழுந்துள்ளது.

புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா?

இதனிடையே இந்த கடனை எல்லாம் ரயில்வே துறைதான் திருப்பி செலுத்த வேண்டாம். ஆனால் நிதி ரிலீஸ் செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 ஆண்டுகள் கழித்து, திருப்பி செலுத்த தொடங்கினால் போதுமானது. அத்தகைய வாய்ப்பை ஜப்பான் வழங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Modi's Rs 98,000 crore bullet train project hits a land roadblock. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X