புல்லட் ரயிலில் ஜப்பானையே பின்னுக்கு தள்ளப்போகும் இந்தியா! இவ்வளவு பெரிய சாதனைய சைலெண்டா பண்ணிட்டாங்க!
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்காக தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்படி 100 கிலோ மீட்டருக்கு பாலங்களும், 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூண்களையும் கட்டமைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயிலாக மும்பை-ஆமதாபாத் இடையே புதிய ரயில் பாதை ஒன்றை கட்டமைக்கும் பணி திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை எல்லாம் தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் தனது பணியில் ஒரு முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ளதாக தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புல்லட் ரயிலுக்காக சுமார் 103.24 கிலோ மீட்டர் அளவில் 251.40 கிலோ மீட்டர் அளவிற்கு தூண்களையும் கட்டமைத்து புதிய மைல்களை எட்டி உள்ளது. குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 100 கிலோ மீட்டர் நீளத்திலான பாலம் சுமார் 40 மீட்டர் நீளம் கொண்ட ஃபேன் பாக்ஸ் கிரட்டர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோக தற்போது நோஸ் பாரியர்களை கட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள பாலங்கள் எல்லாம் குஜராத் பகுதியில் உள்ள 6 ஆறு பகுதிகளை கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இந்த புல்லட் ரயிலுக்காக அதிக பலம் வாய்ந்த கான்கிரிட்கள் அமைக்கப்பட்டு அதன் மேல்தான் டிராக் அமைக்கப்படுகிறது இதே போல தான் ஜப்பானிலும் புல்லட் ரயிலுக்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் புல்லட் ரயில் கட்டமைக்கப்படும் டிராக் என்பது ஜே சிலாப் கொண்டு ஜல்லி கற்கள் இல்லாத டிராக்களாக வடிவமைக்கப்படுகிறது. மேலும் இந்த புல்லட் ரயிலுக்காக முதல் மலை குகை சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு வடிவமைக்கப்பட்டு புல்லட் ரயில் அதற்குள் பயணிக்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புல்லட் ரயிலுக்காக 28 ஸ்டீல் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கான முதல் ஸ்டீல் பாலமும் கடந்த அக்டோபர் மாதமே கட்டமைக்கப்பட்டு விட்டது. இது சுமார் 70 மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலுக்காக மத்திய அரசு ஜப்பான் நாட்டு அரசுடன் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 6 ஆண்டுகளில் இந்த பணி தற்போது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்தப் பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு இந்தியாவில் முதல் புல்லட் ரயில் வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் தீவிரமாக பணிகள் எல்லாம் நடந்து வருகின்றன. தற்போது பாதைகள் கட்டமைக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்து டிராகுகள் மற்றும் மற்ற தொழில்நுட்ப அம்சங்களை கட்டமைக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக கட்டமைக்கப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் அகமதாபாத்தில் இருந்து சூரத்திற்கும் சூரத்தில் இருந்து ஆமதாபாத்திற்கும் ரயில்கள் பயணிக்க முடியும். இதனால் ரயில்கள் ஒரு ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. ஒரே நேரத்தில் அதிகமான ரயில்கள் பயணிக்க முடியும்.
இந்த மும்பை ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் அடுத்தடுத்து பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் போக்குவரத்து தேவை என்பது மிக அதிகமாக இருப்பதால் புல்லட் ரயில் அதற்கு மிகப்பெரிய உதவியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தற்போது சர்வதேச நாடுகளுக்கு இணையாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. புல்லட் ரயில் இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பயணிக்கும் ரயில் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும். இது இந்தியாவின் மிக முக்கியமான வளர்ச்சி என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications









