ஜப்பான் கூட இந்தியாகிட்ட தோக்கப்போகுது! முதல் புல்லட் ரயில் நிலையத்தை நீங்க பாத்தீங்களா? வைரலாகும் வீடியோ!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையமாக குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது தனது சமூக வலைதளம் மூலம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பெரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் புல்லட் ரயில் நிலையம் இந்தியாவில் மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் முதல் புல்லட் ரயிலை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. ஜப்பான் அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு வரப்போகும் புல்லட் ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் சுமார் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும்போது இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான தூரம் வெறும் 2 மணி நேரமாக மட்டுமே இருக்கும்.
இதற்காக மத்திய அரசு குகைகள் அமைத்தும், கடலுக்கு அடியிலும் புல்லட் ரயில் பாதைகளை அமைத்தும் வருகிறது. இந்த திட்டத்திற்கு 1,08,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான 80 சதவீத செலவை ஜப்பான் அரசு தான் செய்கிறது. அதை இந்திய அரசு ஆண்டுக்கு 0.1 சதவீத வட்டியுடன் 50 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த உதவியை செய்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு இந்த புல்லட் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த பின்கான்சன் டெக்னாலஜி என்ற நிறுவனம் வழிகாட்டியாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் நம்பகத்தன்மை, பாதுகாப்பு நிறைந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது 50 ஆண்டுகளாக புல்லட் ரயில் கட்டுமானத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தற்போது மும்பை ஆமதாபாத் ஆகிய நகரங்களை புல்லட் ரயில் மூலம் இணைக்கும் திட்டம் நடந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி டில்லியில் இருந்து வாரணாசி, டில்லியில் இருந்து அகமதாபாத், மும்பையில் இருந்து நாக்பூர், மும்பையில் இருந்து ஹைதராபாத், சென்னையில் இருந்து மைசூர், டில்லியில் இருந்து அம்ரிஸ்டர் ஆகிய பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலாக மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்லும் ரயில் வரும் 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பணிகள் நடந்து முடிந்து விட்ட நிலையில் இந்த இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரட்டைப் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ஜப்பானிலிருந்து ரயில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு இங்கு சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த சோதனை நடந்து விட்டால் 2026 ஆம் ஆண்டு இந்த ரயில் மக்களின் பயன்பாட்டிற்காக வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் புல்லட் ரயிலை கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறிவிடும். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில் புல்லட் ரயில் என்பது இந்தியாவிற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.
இந்தியாவில் நகரங்கள் நீண்ட தூர இடைவெளியில் அமைந்துள்ளதால் இந்த நகரங்களை இணைப்பதற்கு புல்லட் ரயில் சேவை அதிகம் இருக்கிறது. இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் குறைந்தால் மக்களின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் மத்திய அரசு இந்த புல்லட் ரயில் திட்டத்தை மிக துரிதமாக செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு புல்லட் ரயில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது முதற்கட்டமான பணிகள் மட்டுமே நடந்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த கட்டமான பணிகள் துவங்கினால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புல்லட் ரயில் பயன்பாடு அதிகமாக இருக்கும். மெட்ரோ புல்லட் ரயில் மற்றும் சாதாரண ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டால் இந்த வசதிகள் எல்லாம் சிறப்பாக பயன்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications









