விவிஐபி-க்கள் பயன்படுத்தும் புல்லட் ப்ரூஃப் காரை யாராச்சும் இதுக்கு முன்னாடி உள்ள போயி பாத்திருக்கீங்களா!

விவிஐபி-க்களுக்கு பயன்படுத்தப்படும் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட எப்படி இருக்கும்? அதை ஒரு முறையாச்சும் பார்த்துவிட முடியாதா என்பது பலரின் ஏக்கமாகவும், கனவாகவும் இருக்கின்றது. ஆனால், இதை பார்க்கும் பாக்கியம் பெரும்பாலும் யாருக்குமே கிடைப்பதில்லை. அதேவேளையில், விவிஐபி-க்களிடம் பணியாற்றும் நபர்களுக்கு மட்டுமே அதைக் காணக் கூடிய, ஏன் இயக்கி பார்ப்பதற்கான வாய்ப்பே கிடைக்கும்.

இந்த நிலையிலேயே, புல்லட் ப்ரூப் வசதிக் கொண்ட கார் எப்படி இருக்கும்? குறிப்பாக, அதன் உட்பக்கம் எப்படி இருக்கும்? வழக்கமான கார்களைப் போலவே அதுவும் இருக்குமா என்பதை வெளிக் காட்டக் கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Bulletproof toyota fortuner car

இந்தியாவில் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்கள் மிக மிக சொற்ப அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவையும் பல கோடி ரூபாய்களை விலையைக் கொண்டவையாக இருக்கின்றன. எனவே, அத்தகைய காரை வாங்குவது என்பது ஒரு சில செல்வந்தர்களுக்கே எட்டாக் கனியாக இருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவில் உள்ள ஒரு சில நிறுவனங்கள், மாடிஃபிகேஷன் வாயிலாக புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்களை தயார் செய்துக் கொடுக்கின்றன.

அந்தவகையில், இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றானக டொயோட்டா ஃபார்ச்சூனர், அதன் உரிமையாளரின் தேவைக்கு ஏற்ப புல்லட் ப்ரூஃப் காராக மாற்றப்பட்டு இருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் இந்த ஃபார்ச்சூனர் கார் மாடலை சாதாரணமான வசதிக் கொண்ட ஓர் வாகனமாக மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Bulletproof toyota fortuner window

இதையே அதீத பாதுகாப்பு திறன் கொண்ட காராக அதன் உரிமையாளர் தேவைக்கு ஏற்ப மாற்றி இருக்கின்றார். இந்த அப்கிரேஷன் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் ஃபார்ச்சூனர் காரின் உள் மற்றும் வெளிப்பக்கத்தில் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, காரின் கதவுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு, புதிதாக பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அவை துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டக்களின் தாக்கத்தை தாங்கும் திறன் கொண்டவை ஆகும். கார் கதவு மற்றும் உட் பக்கத்தில் கூடுதலாக ஸ்டீல் பேனல்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த பேனல்கள் லெதரால் போர்த்தப்பட்டு பிரீமியம் லுக்கில் காட்சியளிக்கின்றன. மேலும், இவை குண்டு மழையே பொழிந்தாலும் காருக்குள் இருக்கும் பயணிக்கு அதீத பாதுகாப்பை வழங்கும்.

Bulletproof toyota fortuner interior

டோர்களைத் தொடர்ந்து. காரில் உள்ள அனைத்து கண்ணாடிகளும், அதாவது, ஜன்னல், விண்ட்ஷீல்டு என அனைத்தும் துப்பாக்கி தோட்டாக்களின் தாக்கத்தை தாங்கும் திறன் கொண்டவையாக மாற்றப்பட்டு இருக்கின்றன. வழக்கமான துப்பாக்கிகளின் தோட்டாக்களை மட்டுமில்லைங்க இது ஏகே47 போன்ற மெஷின் கன்களின் தாக்கத்தைக்கூட தாங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர இந்த காரின் டயர்களும்கூட தூப்பாக்கி குண்டுகளின் தாக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. குண்டுகள் இந்த டயர்களை பதம் பார்த்தால் கூட, அந்த கார் சுமார் 200 கிலோ மீட்டர் முதல் 250 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும்.

Bulletproof toyota fortuner suspension

ஆமாங்க, சரமாரியாக ஒருவர் இந்த காரின் டயரை குறி வைத்து தாக்கினால் கூட அந்த கார் எதிராலியின் தாக்கத்தில் இருந்து உங்களை காப்பாற்றும் அளவிற்கு நீண்டா தூரம் வரை அழைத்துச் செல்லும். இதுபோன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருப்பதனால், இந்த காரின் எடை சற்று அதிகமாகி இருக்கின்றது.

1,000 கிலோ வரை இந்த காரின் எடை அதிகரித்து இருக்கின்றது. இந்த அளவு அதிக எடை அதிகரிப்பு என்பது காரின் சஸ்பென்ஷனில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஆகையால், இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட காரை ஒரு சிலர் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர், மாநிலத்தின் முதல்வர்களைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி, அதானி போன்ற ஒரு சில பணக்காரர்களும் புல்லட் ஃப்ரூஃப் வசதிக் கொண்ட கார்களை இந்தியாவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Article Published On: Tuesday, November 7, 2023, 5:00 [IST]
English summary
Bulletproof toyota fortuner video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X