மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டி வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்ததை விட தற்போது மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனை போலீசார் மிக கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். எனவே ஒரு சில வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

இது தொடர்பான செய்திகள் வெளியானதால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபோன்ற கடுமையான அபராத தொகைகள் பாதிப்பை ஏற்படுத்தும் என வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அத்துடன் பல்வேறு மாநில அரசுகளும் கூட மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ளன.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள், அபராத தொகையை கடுமையாக உயர்த்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநில அரசு அபராத தொகைகளை குறைத்து விட்டது. இதுதவிர பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அபராதத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களும் கூட அபராத தொகையை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அபராத தொகைகளை உயர்த்தியதால், விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என ஆரம்பத்தில் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு இருக்கவே செய்தது. ஆனால் போலீசாரின் கெடுபிடி காரணமாக அதன்பின் கடும் எதிர்ப்பு கிளம்பி விட்டது.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

இந்த சூழலில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், விவசாயி ஒருவரின் மாட்டு வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் தற்போது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள சஹாஸ்பூர் என்ற இடத்தை ஒட்டியிருக்கும் ஒரு கிராமம் சார்பா. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ் ஹசன். இவர் விவசாயி ஆவார்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

இவர் தனது சொந்த நிலத்திற்கு அருகே மாட்டு வண்டியை நிறுத்தியிருந்தார். அப்போது போலீசார் அந்த பகுதியில் ரோந்து வந்துள்ளனர். அப்போது மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். ஆனால் அருகில் யாரும் இல்லை. இதன் பின் இந்த மாட்டு வண்டி யாருடையது? என போலீசார் விசாரித்தனர். இதில், இது ரியாஸ் ஹசனின் மாட்டு வண்டி என்பது தெரியவந்தது.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

இதன்பின் மாட்டு வண்டியை நேராக ரியாஸ் ஹசனின் வீட்டிற்கு ஓட்டி சென்ற போலீசார், அவருக்கு மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 81ன் கீழ் 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் ரியாஸ் ஹசன் கடும் அதிர்ச்சியடைந்தார். எனது சொந்த நிலத்திற்கு வெளியே எனது மாட்டு வண்டியை நிறுத்தியதற்காக அபராதம் விதித்தது ஏன்? என போலீசாரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் எனக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும்? மாட்டு வண்டிகள் இதன் கீழ் வராது எனவும் போலீசாரிடம் ரியாஸ் ஹசன் கேட்டுள்ளார். இதன்பின் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்க முடியாது என்பதை போலீசார் உணர்ந்து கொண்டு உடனடியாக பின்வாங்கி விட்டனர்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

எனவே விவசாயி ரியாஸ் ஹசனுக்கு வழங்கப்பட்ட சலான் ரத்து செய்யப்பட்டது. இந்த தவறு எப்படி நடந்தது என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது ரியாஸ் ஹசனின் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக அவர்கள் நினைத்து கொண்டார்களாம்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

இதன் காரணமாகதான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விட்டது என போலீசார் கூறியுள்ளனர். சரி, மணல் கடத்தலுக்கு எதற்காக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்? என நீங்கள் நினைப்பது சரிதான். இதற்கும் போலீசார் ஒரு அருமையான பதிலை கைவசம் வைத்திருக்கின்றனர். பில் புக் மாறி விட்டது எனக்கூறி இதனை போலீசார் சமாளித்துள்ளனர்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

அதாவது மோட்டார் வாகன சட்டத்திற்கான பில் புக் மற்றும் மற்ற குற்றங்களுக்கான பில் புக் இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருந்ததாம். இருட்டாக இருந்ததால், போலீசாரால் எது சரியான பில் புக் என்பதை கண்டறிய முடியவில்லையாம். இதன் காரணமாகதான் தவறுதலாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சலான் வழங்கி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

உண்மையில் ஐபிசி-யின் கீழ்தான் விவசாயி ரியாஸ் ஹசன் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் நினைத்தார்களாம். ஆனால் இருட்டில் பில் புக் தெரியாததால், தவறுதலாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதித்து விட்டார்களாம். இந்த அருமையான விளக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2019, 17:11 [IST]
English summary
Bullock Cart Owner Fined Rs 1,000 Under Motor Vehicles Act. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+