முயல் ஹெல்மெட் அணிந்து ஆர்15 பைக்கில் குற்றாலத்தையே கதறவிட்ட இளைஞர்! தேடி கண்டுபிடித்த போலீஸ் வைத்த ஆப்பு!

குற்றாலத்தில் முயல் வடிவ ஹெல்மெட் அணிந்து சென்று சாலையில் அபாயகரமாக வாகனம் ஓட்டிய இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். சாலையில் முயல் குட்டிகள் மட்டும் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்த விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் என்பது தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் சுற்றுலாவிற்காக வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலையில் ஐயப்ப சீசன் இருப்பதால் குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில இடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் பைக்கில் இளைஞர் ஒருவர் வலம் வந்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

bunny helmet rider fined

குற்றாலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முயல் போன்ற வித்தியாசமான ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் தனது யமஹா ஆர்15 வி3 பைக்கில் வலம் வந்துள்ளார். இவர் பைக்கில் வேகமாக சாலையில் செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவரது வித்தியாசமான ஹெல்மெட்டை பார்த்து ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உறைந்து போனார்கள்.

இந்த இளைஞர் குற்றாலம் பகுதியில் முயல் போன்ற ஹெல்மெட் அணிந்து வளம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது பலர் இது குறித்து விமர்சனங்களை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் குற்றாலம் போலீசார் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கினார்கள். அந்த சம்பவம் நடந்த நாளன்று குற்றாலம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த முயல் ஹெல்மெட் அணிந்து அபயகரமாக வாகனம் ஓட்டியவரை தேடினார்கள்.

bunny helmet rider fined

பின்னர் அவர் வாகனத்தின் பதிவெண்னை வைத்து சம்பந்தப்பட்ட நபர் யார் என கண்டுபிடித்து அவரது வீட்டுக்கே சென்று போலீசார் அவர்களை குற்றாலம் போலீஸ் ஸ்டேஷன் என்று அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டியதால் அவருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் போலீசார் அவரிடம் இது போன்ற ஹெல்மெட்டுகளை அணிந்து இனி வாகனம் ஓட்டக்கூடாது இதனால் பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என எடுத்து சொல்லி அறிவுரை வழங்கினார்கள். இதையடுத்து அவரிடம் அபராத தொகையை வசூலித்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்ட போலீசார் இது குறித்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதன்படி குற்றாலத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும் இது போன்ற இளைஞர்கள் யாரும் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அல்லது மற்ற உபகரணங்கள் அணிந்து பயணிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய இளைஞர் அணிந்துள்ள இந்த முயல்கள் என்பது ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. ஆனால் இதற்கு தரச் சான்று என்பது வழங்கப்படவில்லை. இந்த ஹெல்மெட்டை அணிந்தால் சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது தரச் சான்று பெற்ற ஹெல்மெட் மட்டுமே ஹெல்மெட்டாக போலீசாரால் கருதப்படும்.

தரம் இல்லாத ஹெல்மெட் மற்றும் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகைகள் மட்டுமே அணியக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட்டை அணிந்து வாகன ஓட்டி விபத்தில் சிக்கினால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஹெல்மெட் அணிந்ததற்கான பயனே இல்லாமல் இருக்கும். அதே நேரம் இது போன்ற வித்தியாசமான ஹெல்மெட்டை அணிந்து செல்வது சக வாகன ஓட்டிகளுக்கும் சாலையில் இருக்கும் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனம் ஓட்டும் போது கவனத்துடன் பொறுப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும். நீங்கள் செல்லும் பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே நேரம் சாலையில் உள்ள மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றமாகும். அதனால் இது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 11:18 [IST]
English summary
Bunny helmet rider fined while riding yamaha r15 in courtallam
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+