ஓடவும் முடியல, ஒளியவும் முடியல!! சுமார் 7 மணிநேர போக்குவரத்து நெரிசல் - இந்த ஒரு காரணத்தினாலா?

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ஒரு பகுதியில் சுமார் 7 மணிநேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நீண்ட மணிநேரத்துக்கு காத்திருந்துள்ளனர். எதனால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்ற கேள்விக்கான பதிலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெவாடா மாகாணத்தில் பிளாக் ராக் பாலைவனத்தில் ஒவ்வொரு வருடமும் பர்னிங் மேன் விழா கோலாகலமாக நடக்கும். வறண்ட பாலைவன பகுதியில் நடைபெறும் இந்த விழாவுக்கு செல்ல முறையான சாலை வசதிகள் கிடையாது. எப்போதும் வறண்ட பகுதியாக இருப்பதால், அதில் வாகனத்தை ஓட்டுவது பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கலாம்.

traffic jam climbed to 7 hours

ஆனால், இந்த வருடத்தில் நடந்த கதையே வேறு. இந்த வருடமும் பர்னிங் மேன் விழா விமர்சையாக நடைபெற்றது. ஆனால் விழா நிறைவடையும் இறுதி நாட்களில் கன மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது. இதனால் விழாவை மேற்கொண்டு நடத்த முடியாமல் போக, எல்லாரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால், அது வறண்ட பாலைவன மண் என்பதால், மழை நீரால் சகதி போன்று ஆகிவிட்டது.

விழா நடந்த பகுதியை விட்டு வெளியேறியவர்களின் வாகனங்கள் அடுத்த சில கிமீ தொலைவிலேயே சகதியில் சிக்கிக் கொண்டன. இவ்வாறு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டதினால், அங்கு மிக நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், சுமார் 7 மணிநேரத்திற்கு கிட்டத்தட்ட 65,000 மக்கள் தங்களது வாகனங்களுடன் காத்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பலர் தங்களது கார்களில் வந்த நிலையில், சிலர் பெரிய பெரிய லாரிகளிலும், வேன்களிலும் வந்துள்ளனர். விழா நடந்த இடத்தில் இருந்து, முறையான சாலைக்கு செல்ல 8 கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பாலைவனத்தில் பயணிக்க வேண்டும். இந்த 8கிமீ+ தூரத்தை 4-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களும், வாகனங்களும் எப்படியோ கடந்துவிட்டன. ஆனால், 2-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

traffic jam climbed to 7 hours

பாலை வன பகுதி என்பதால், எங்கு வேண்டுமானாலும் வாகனங்களை இயக்கலாம். மேடு, பள்ளங்களோ அல்லது மரங்கள், புதர்களோ கிடையாது. ஆனால் மழை பெய்த காரணத்தால், வேறு வழியில் சென்று சேற்றில் சிக்கிக் கொண்டால் பெரிய பிரச்சனையாகி விடும் என்பதால் விழாவில் பங்கேற்ற வாகனங்கள் அனைத்தும் 10-லேன்களில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சென்றன.

ஏனெனில் அப்போதுதான், முன்னால் சென்ற வாகனத்தின் பாதையில் எளிதாக செல்ல முடியும். முன்னால் சென்ற வாகனங்கள் சேற்றில் கொண்டால், அங்கிருந்து அவை மீளூம் வரையில் பின்னால் சென்ற வாகனங்கள் காத்திருந்துள்ளன. இவ்வாறு தான், சுமார் 7 மணிநேர போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. அப்போது டிரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன.

சிலர் போக்குவரத்து நெரிசலில் நேரத்தை வீணடிக்காமல், அங்கேயே தங்களது வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு, 8 கிமீ தொலைவிற்கு அப்பால் உள்ள நகரத்திற்கு நடந்து சென்றுள்ளனர். நெவேடா மாகாணத்தின் பிரபலங்களான டிஜே டிப்லோ மற்றும் நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக் உள்ளிட்டோர் அவ்வாறு நடந்து சென்றுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் இதனை காட்டிலும் பெரியதாக சுமார் 12 மணிநேர போக்குவரத்து நெரிசல் இதே பகுதியில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 8 கிமீ தொலைவிற்கு சுமார் 7 மணிநேர போக்குவரத்து நெரிசல் என்பது உண்மையில் ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த விஷயத்தில் நாம் அமெரிக்கர்களின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் ஒழுக்க பண்பை பாராட்ட வேண்டும். ஏனெனில், அருகில் தான் அவ்வளவு இடம் உள்ளதே என பாதையில் இருந்து விலகி புதியதாக நாமாக ஒரு பாதையில் செல்ல முனைவோம். ஆனால் அது சிக்கலை உருவாக்கும் என்பதை உணர்ந்து இவர்கள் 10 லேன்களாக சென்றுள்ளனர்.

Image Courtesy: Reuters

Article Published On: Thursday, September 7, 2023, 11:14 [IST]
English summary
Burning man festival traffic jam climbed to 7 hours
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+