உள்ளே இத்தன பக்தர்களா! கோயிலுக்கு போகும் வழியில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பஸ்! நடுங்க வைக்கும் வீடியோ!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று பிஜ்நூர். இந்த மாவட்டத்தில் உள்ள பிஜ்நூர்-ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலை 74 வழியாக, கொட்டவாலி என்ற ஆறு ஓடுகிறது. மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் நேற்று முன் தினம் (செப்டம்பர் 15) காலை, பஸ் ஒன்று சிக்கி கொண்டது. இது நேபாளத்தில் இருந்து ஹரித்வார் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும். பஸ்ஸின் உள்ளே 53 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்த யாத்ரீகர்கள் ஆவர்.

ஆற்றில் பஸ் சிக்கிய தகவல் கிடைத்த உடன், காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், பஸ்சுக்குள் இருந்த 53 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அத்துடன் ஆற்றில் இருந்து பஸ்சும் பத்திரமாக மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான 2 வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இதில் ஒரு வீடியோவில் பஸ்சில் இருந்து யாத்ரீகர்கள் மீட்கப்படுவதை காண முடிகிறது. மற்றொரு வீடியோவில் பஸ் மீட்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில் பஸ் உடன் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த யாத்ரீகர்கள் அனைவரும் சென்று கொண்டிருந்த ஹரித்வார் ஒரு புனித தலம் ஆகும். இந்தியாவின் மிக முக்கியமான புனித தலங்களில் ஒன்றான இந்த ஹரித்வார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மலை பிரதேசங்களுக்கு மழை காலத்தில் செல்லும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இங்கு மழை காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், திடீர் நிலச்சரிவுகளும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மழைக்காலங்களில் இந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு முன்னால் நாம் ஒரு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். மழை காலங்களில் நீங்கள் இந்த மாநிலங்களுக்கு செல்வது என முடிவாகி விட்டால், வானிலை முன் அறிவிப்புகளை உன்னிப்பாக கவனிப்பது நல்லது. மேக வெடிப்பு, கனமழை போன்ற விஷயங்களுக்கு வாய்ப்புகள் உள்ளதா? என்பதை பார்த்த பின்னர், பயண திட்டங்களை வகுக்கலாம்.
அத்துடன் பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை ஒரு முறைக்கு இரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டயர்கள், ஹெட்லைட்கள் மற்றும் பனி விளக்குகள் போன்ற முக்கியமான பாகங்கள் எல்லாம் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அத்துடன் விண்டுஷீல்டு வைப்பர்கள், டிஃபாகர்கள் மற்றும் இதர முக்கியமான எலெக்ட்ரிக்கல் பாகங்கள் எல்லாம் சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். இதனுடன் டார்ச் லைட்கள், கூடுதல் பேட்டரிகள், கத்தி, கத்தரிக்கோல், கயிறுகள் போன்ற அம்சங்களையும் முன்னெச்சரிக்கையாக கையில் வைத்து கொள்ளுங்கள்.
ஆபத்து சமயங்களில் இவை உங்களுக்கு உதவி செய்யலாம். மழை காலங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பயணங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடும். அவற்றையும் கவனிப்பது நல்லது. அவற்றை பொறுத்து உங்கள் சுற்றுலா பயணங்கள் மற்றும் புனித பயணங்களை மேற்கொள்வது நன்மை அளிக்கும்.


Click it and Unblock the Notifications








